Latest Tamil News

சினிமா செய்திகள்

விரைவுச் செய்திகள்

  • சமயத் தலைவர்களுடன் 

    தலைமை செயலர் ஆலோசனை

    கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், வரும் 6ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களை திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இது தொடர்பாக முடிவெடுப்பதற்காக இன்று மாலை 4.45 மணியவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் பல்வேறு சமயத் தலைவர்களுடன் இன்று மாலை நடக்கும் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தவுள்ளார். 

    Jun 3, 2020, 14:46 PM IST
  • சென்னை ராயபுரத்தில் 
    3 ஆயிரம் பேருக்கு கொரோனா
     
    சென்னையில் இது வரை 16,585 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. குறிப்பாக, ராயபுரம் மண்டலத்தில்  3,060 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களில் பாதிப்பு வருமாறு:   கோடம்பாக்கம் - 1,921, தண்டையார்பேட்டை -  2,007, திரு.வி.க.நகர் -  1,711, தேனாம்பேட்டை - 1,871, அண்ணாநகர் - 1,411, வளசரவாக்கம் -  910, அடையாறு - 949, அம்பத்தூர் - 619, திருவொற்றியூர் - 559, மாதவரம் - 400, மணலி - 228, பெருங்குடி - 278
    ஆலந்தூர் - 243, சோழிங்கநல்லூர் - 279
     

     
    Jun 3, 2020, 14:42 PM IST
  • டெல்லி அரசில் சம்பளம்

    போட பணம் இல்லை..

    டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று அளித்த பேட்டியில், ‘‘டெல்லி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடவும், சாதாரணச் செலவுகளுக்கும் மாதம் ரூ.3500 கோடி தேவை. ஆனால், கடந்த 2 மாதங்களாக ஜி.எஸ்.டி வசூல் தலா ரூ.500 கோடி அளவில்தான் உள்ளது. மற்ற வழிகளிலும் ரூ.1735 கோடி வருவாய் மட்டுமே கிடைத்துள்ளது. எனவே, மத்திய அரசாங்கம் டெல்லி அரசுக்கு உடனடியாக ரூ.5 ஆயிரம் கோடி நிதி அளிக்க வேண்டும்’’ என்றார். 

    May 31, 2020, 14:10 PM IST
  • தொழிலாளர்களுக்கு எவ்வளவு

    கொடுத்தீர்கள்.. கபில்சிபல் கேள்வி

     

    காங்கிரஸ் மூத்த தலைவர் கபி்ல் சிபில், பிரதமர் மோடிக்கு ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில், ‘‘பி.எம். கேர் நிதியில் இருந்து இது வரை எத்தனை தொழிலாளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீ்ர்கள்? இந்த ஊரடங்கு காலத்தில் பல தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். சிலர் ரயிலில் இறந்து்ள்ளார்கள். சில நடக்கும் போது இறந்துள்ளார்கள். சிலர் பசியால் மடிந்துள்ளார்கள். நீங்கள் எவ்வளவு தொகை கொடுத்தீ்ர்கள் என்று பதில் கூற வேண்டும்’’ என்றார்

    May 31, 2020, 14:07 PM IST
  • தெருவுக்கு வாங்கய்யா..

    யஷ்வந்த் சின்கா ட்விட்

    முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா இன்று ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘ஏழைகளின் துயரங்களை கவனிக்காமல், மத்திய அரசு கண்களையும், காதுகளையும் மூடிக் கொண்டிருக்கும் போது, எதிர்க்கட்சிகள் வெறும் மனுக்களை கொடுத்து கொண்டிருப்பது சரியா? இதற்கு மேலும் வெறும் அறிக்கைகள் எதுவும் பலனளிக்காது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் தெருவுக்கு வந்து போராட வேண்டும்’’ என்று கூறியுள்ளார். 

    May 23, 2020, 14:18 PM IST
  • சிறப்பு ரயில்கள் வேண்டாம்..

    மேற்கு வங்கம் கோரிக்கை

    மேற்கு வங்கத்தில் அம்பன் புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், தற்போது சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் எ்னறு அம்மாநில அரசு கோரியு்ள்ளது. இது தொடர்பாக ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவுக்கு தலைமைச் செயலாளர் ராஜு சின்கா கடிதம் அனுப்பியு்ள்ளார், அதில், சிறப்பு ரயிலில் வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பரிசோதனைக்கு உள்ளாக்கி, தனிமைப்படுத்துவதற்கு இயலாத சூழல் உள்ளதால், வரும் 26ம் தேதி வரை சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் எ்னறு கோரப்பட்டுள்ளது. 

    May 23, 2020, 13:57 PM IST
  • மகாராஷ்டிராவில் 44 ஆயிரம்

    பேருக்கு கொரோனா பாதிப்பு

    நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 44,582 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. இதில், 12,583 பேர் குணமடைந்துள்ளனர். 1517 பேர் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர். மாநிலத்தில் மும்பையில்தான் அதிகபட்சமாக 27 ஆயிரம் பேருக்கு கொரானா தொற்று பரவியிருக்கிறது.

     

    May 23, 2020, 13:53 PM IST
  • ஒரு லட்சத்து 6,750 பேருக்கு

    கொரோனா பரவியது..

    நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து  1,139 பேரில் இருந்து  ஒரு லட்சத்து 6,750 பேராக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39,174ல் இருந்து 41,298 ஆக அதிகரித்து்ள்ளது. கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை  3,163ல் இருந்து 3,303 ஆக உயர்ந்துள்ளது.

    May 20, 2020, 13:42 PM IST
  • மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு

    1325 பேர் உயிரிழப்பு

    நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் மிகவும் அதிகமானோருககு கொரோனா பரவியிருக்கிறது. இது வரை 37,136 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதில் 1325 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். காவல்துறையில் மட்டும் 1388 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதில் 428 பேர் குணமடைந்துள்ளனர். 12 பேர் பலியாகியுள்ளனர். 

    May 20, 2020, 13:37 PM IST
  • கோயில்கள் ஜூன் 1ல் திறப்பு

    நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு இம்மாதம் 31ம் தேதியுடன் முடிகிறது. ஜூன் 1ம் தேதி முதல் ஏ.சி. வசதி இல்லாமல் 200 ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் 25 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ளன.

    இதன் தொடர்ச்சியாக ஜூன் 1ம் தேதி முதல் அறநிலையத் துறையின் நிர்வாகத்தில் உள்ள 40 ஆயிரம் கோயில்களும் திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், பக்தர்கள் கூட்டத்தை சமாளிப்பது குறித்தும் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்டவை குறித்தும் அறநிலையத்துறை ஆலோசித்து வருகிறது. 

     

    May 20, 2020, 13:35 PM IST

கிரைம் செய்திகள்

டெக்னாலஜி செய்திகள்

சென்னை செய்திகள்

விளையாட்டு செய்திகள்

லைஃப்ஸ்டைல்

பிசினஸ்

சமையல் குறிப்புகள் - ரெசிபி