Latest Tamil News

விரைவுச் செய்திகள்

 • மருத்துவப் பணியாளர் 

  இறந்தால் ரூ.1 கோடி

  கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் வரும் 14்ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

  இந்நிலையில், கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் சுகாதாரத் துறைப் பணியாளர்கள் யாருக்காவது நோய்த் தொற்று ஏற்பட்டு, உயிரிழந்தால், அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு தரப்படும் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.  

 • பிரதமர் மோடி நாளை

  முதல்வர்களுடன் ஆலோசனை 

  கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் வரும் 14ம் தேதி வரை  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மூலமாக பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. 

  இந்த சூழலில், மாநிலங்களில் நடத்தப்பட்ட சோதனைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வர்களிடம் நாளை காலை 10 மணிக்கு பிரதமர் மோடி ஆலோசிக்க உ்ளளார். வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. 

 • கொரோனா  பொய்ச் செய்தியை

  தடுக்க  கண்காணிப்பு குழு

  கொரோனா ஊரடங்கின் போது ஏராளமான பொய்ச் செய்திகள் வாட்ஸ் அப் மற்றும் இதர சமூக ஊடகங்களில் பரவுகிறது. வேண்டுமென்றே  பொய்ச் செய்தியை வெளியிட்டு பீதியை கிளப்புவது, தவறான மருத்துவங்களை பரப்புவது அதிகமாகி விட்டது. இதையடுத்து, பொய்ச் செய்திகள் பரவுவதை தடுக்க ஒரு கண்காணிப்பு குழு அமைக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

 • வெளியூர் செல்ல பாஸ்

  எப்படி வாங்குவது?

  கொரோனா ஊரடங்கின்போது, சென்னையில் இருப்பவர்கள் வெளியே செல்வதற்கு காவல்துறையிடம் அனுமதி பெறத் தேவையில்லை. சென்னையில் ஒரு மண்டலத்தில் இருந்து இன்னொரு மண்டலத்திற்கு செல்வதற்கு மாநகராட்சி மண்டல அதிகாரியிடம் பாஸ் வாங்க வேண்டும். அதே சமயம், வெளியூர் செல்வதற்கு மாநகராட்சி ஆணையரிடம் பாஸ் வாங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருமணம், துக்க நிகழ்வு, மோசமான உடல்நிலை ஆகிய காரணங்களுக்குத்தான் பாஸ் தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 • ஊரடங்கு நீட்டிப்பு இல்லை

  மத்திய அரசு விளக்கம்

  கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஏப்.14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த ஊரடங்கை மேலும் ஒரு வாரத்தி்ற்கு நீட்டிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக ஒரு செய்தி வெளியானது. 

  இந்த செய்தி மத்திய கேபினட் செயலாளர் ராஜிவ் கவுபா மறுத்துள்ளார். ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அவர் கூறியுள்ளார். 

 • வெளிமாநிலத் தொழிலாளர்..

  சுப்ரீம்  கோர்ட் கேள்வி

  கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், டெல்லி உள்பட முக்கிய நகரங்களில் வசித்து வந்த பிற மாநிலத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் உணவின்றி தவிக்கின்றனர். பலரும் நடந்தே பல நூறு கி.மீ. தூரம் செல்கின்றனர். 

  இப்படி அவதிப்படும் தொழிலாளர்களுக்கு உதவி கோரி தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரித்தது. இதில், வெளிமாநிலத் தொழிலாளர் நிலைமை குறித்து அறிக்கை அளிககுமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

 • தினமும் ஒரு லட்சம் 

  முகக்கவசம் தயாரிப்பு

  நாட்டில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்நோய்க்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் N95 முகக் கவ்சம் அணிய வேண்டும். ஆனால், அவற்றுக்கு தட்டுப்பாடு உள்ளதால் சாதாரண கவசம் அணிகின்றனர். 

  இந்நிலையில், நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் 12 லட்சம் N95 முகக் கவ்சம் இருந்ததாகவும், கடந்த 2 நாட்களில் மேலும் 5 லட்சம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது 2 கம்பெனிகள் தினமும் 50 ஆயிரம் N95 முகக் கவ்சம் தயாரிப்பதாகவும், இதை தலா ஒரு லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது. 

 • ஊரடங்கை மீறி சுற்றிய

  22,926 பேர் கைது..

  தமிழகத்தில் இது வரை 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு்ள்ளது. சென்னை, மதுரை, ஈரோடு மாவட்டங்களில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஊரடங்கை மீறி மக்கள் இருசக்கர வாகனங்களில் சுற்றி வருகின்றனர். 

   இதையடுத்து, ஊரடங்கை மீறி சுற்றிய  22,926 பேரை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர். மேலும், 19,637 வழக்குகள் பதிவு செய்து, 15,129 வாகனங்களை பறிமுதல் செய்து்ளளனர். மேலும், இதுவரை  5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டிருக்கிறது.

 • தமிழகத்தில் 144 தடையை

  மீறிய 17,668 பேர் கைது..

  கொரோனா பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் மீது வழக்கு தொடரப்படுகிறது. இதன்படி, நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 14,815 வழக்குகள் போடப்பட்டுள்ளன. 11,565 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  மேலும், 17,668 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. 

 • ஈரானில் இருந்து 275 இந்தியர்கள்

  ஜோத்பூர் வந்து சேர்ந்தனர்

  கொரோனா கடுமையாக பாதித்துள்ள ஈரானில் இருந்த இந்தியர்கள் 275 பேர் இன்று காலை ஜோத்பூர் வந்து சேர்ந்தனர். அவர்களில் 133 பேர் பெண்கள், 142 பேர் ஆண்கள். இவர்கள் ராணுவ முகாம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தனிமையில் வைக்கப்படுவார்கள் எ்னறு கூடுதல் சுகாதாரத் துறை செயலாளர் ரோகித்குமார் சிங் தெரிவித்தார்.  

சினிமா செய்திகள்

Advertisement

கிரைம் செய்திகள்

டெக்னாலஜி செய்திகள்

சென்னை செய்திகள்

விளையாட்டு செய்திகள்

லைஃப்ஸ்டைல்

பிசினஸ்

சமையல் குறிப்புகள் - ரெசிபி