Latest Tamil News

சினிமா செய்திகள்

விரைவுச் செய்திகள்

  • சென்னை ராயபுரத்தில்

    3717 பேருக்கு கொரோனா

    தமிழகத்தில் சென்னையில்தான் அதிக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ராயபுரம் மண்டலத்தில் அதிக அளவாக 3,717 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்து, தண்டையார்பேட்டை 2,646, தேனாம்பேட்டை 2,374, கோடம்பாக்கம் 2,323, திரு.வி.க. நகர் 2,073, அண்ணாநகர் 1,864, அடையாறு 1,153, வளசரவாக்கம் 1,043 பேருக்கும்  கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.


     
    Jun 7, 2020, 13:30 PM IST
  • ஜெ.அன்பழகன் உடல்நிலையில்

    ஓரளவு முன்னேற்றம்..

    திமுக மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகனுக்கு கடந்த 2ம் தேதி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவர் ரேலா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், அந்த நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. 

    இந்நிலையில், அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது. ஆரம்பத்தில் 80 சதவீதம் வென்டிலேட்டர் உதவியால் மூச்சு விட்ட அன்பழகன், நேற்று 67 சதவீத வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்தார். இந்நிலையில், அவருக்கு சுவாசிப்பதற்கு வெறும் 29 சதவீத அளவே வென்டிலேட்டர் உதவி தேவைப்படுவதாகவும், அவரது உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது. 

    Jun 7, 2020, 13:24 PM IST
  • மகாராஷ்டிராவில் 
    82,968 பேருக்கு கொரோனா..
     
    மகாராஷ்டிராவில் இது வரை 82,968 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதில், 37,390 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு பலியானவர் எண்ணிக்கை 2,969 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிராவே முதல் இடத்தில் உள்ளது.
     
     
    Jun 7, 2020, 13:21 PM IST
  • டெல்லியில் நாளை

    ஓட்டல், கோயில்கள் திறப்பு

    டெல்லியில் நாளை முதல் ஓட்டல்கள், கோயில்கள், வணிக வளாகங்கள் திறக்கப்படும் எ்னறு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடந்த மாதமே தளர்த்தப்பட்டாலும், வெளி மாநிலங்களில் இருந்து இ-பாஸ் பெற்ற வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தன. நாளை முதல் இந்த கட்டுப்பாடும் நீக்கப்படுகிறது. 

    டெல்லியில் கொரோனா பரவல் இன்னும் குறையவில்லை. இது வரை 27,654 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. எனினும், நாளை முதல் டெல்லி இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறது. 

    Jun 7, 2020, 13:17 PM IST
  • டெல்லி குடிகாரர்களுக்கு

    ஒரு நல்ல செய்தி..

    டெல்லியில் கடந்த மாதம் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போது, மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. அப்போது மதுபானங்கள் மீது அதிகபட்ச சில்லரை விற்பனை விலையில்(எம்.ஆர்.பி), 70 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டது. கொரோனா தடுப்பு பணிக்கு நிதி சேர்ப்பதற்காக இந்த ‘கொரோனா வரி’ விதிக்கப்பட்டது.

    இந்நிலையில்,  வரும் 10ம் தேதி முதல் இந்த கொரோனா வரி வாபஸ் பெறப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். 

    Jun 7, 2020, 13:10 PM IST
  • இந்தியாவில் இது வரை

    46 லட்சம் கொரோனா டெஸ்ட்

    இந்தியாவில் ஊரடங்கு 4 முறை நீ்ட்டிக்கப்பட்டும் கொரோனா பரவல் கட்டுப்படவில்லை. தற்போதுதான் தினமும் சராசரியாக 9 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவி வருகிறது. இந்நிலையில், நேற்று ஒரு லட்சத்து 42,069 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும், மொத்தத்தில் 46 லட்சத்து 66,386 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஐ.சி.எம்.ஆர் தெரிவித்திருக்கிறது. 

    அதே சமயம், சீனாவின் உகான் நகரில் 70 நாட்களுக்குள் 98 லட்சம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதன் மூலமே கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

    Jun 7, 2020, 13:05 PM IST
  • சமயத் தலைவர்களுடன் 

    தலைமை செயலர் ஆலோசனை

    கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், வரும் 6ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களை திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இது தொடர்பாக முடிவெடுப்பதற்காக இன்று மாலை 4.45 மணியவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் பல்வேறு சமயத் தலைவர்களுடன் இன்று மாலை நடக்கும் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தவுள்ளார். 

    Jun 3, 2020, 14:46 PM IST
  • சென்னை ராயபுரத்தில் 
    3 ஆயிரம் பேருக்கு கொரோனா
     
    சென்னையில் இது வரை 16,585 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. குறிப்பாக, ராயபுரம் மண்டலத்தில்  3,060 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களில் பாதிப்பு வருமாறு:   கோடம்பாக்கம் - 1,921, தண்டையார்பேட்டை -  2,007, திரு.வி.க.நகர் -  1,711, தேனாம்பேட்டை - 1,871, அண்ணாநகர் - 1,411, வளசரவாக்கம் -  910, அடையாறு - 949, அம்பத்தூர் - 619, திருவொற்றியூர் - 559, மாதவரம் - 400, மணலி - 228, பெருங்குடி - 278
    ஆலந்தூர் - 243, சோழிங்கநல்லூர் - 279
     

     
    Jun 3, 2020, 14:42 PM IST
  • டெல்லி அரசில் சம்பளம்

    போட பணம் இல்லை..

    டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று அளித்த பேட்டியில், ‘‘டெல்லி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடவும், சாதாரணச் செலவுகளுக்கும் மாதம் ரூ.3500 கோடி தேவை. ஆனால், கடந்த 2 மாதங்களாக ஜி.எஸ்.டி வசூல் தலா ரூ.500 கோடி அளவில்தான் உள்ளது. மற்ற வழிகளிலும் ரூ.1735 கோடி வருவாய் மட்டுமே கிடைத்துள்ளது. எனவே, மத்திய அரசாங்கம் டெல்லி அரசுக்கு உடனடியாக ரூ.5 ஆயிரம் கோடி நிதி அளிக்க வேண்டும்’’ என்றார். 

    May 31, 2020, 14:10 PM IST
  • தொழிலாளர்களுக்கு எவ்வளவு

    கொடுத்தீர்கள்.. கபில்சிபல் கேள்வி

     

    காங்கிரஸ் மூத்த தலைவர் கபி்ல் சிபில், பிரதமர் மோடிக்கு ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில், ‘‘பி.எம். கேர் நிதியில் இருந்து இது வரை எத்தனை தொழிலாளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீ்ர்கள்? இந்த ஊரடங்கு காலத்தில் பல தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். சிலர் ரயிலில் இறந்து்ள்ளார்கள். சில நடக்கும் போது இறந்துள்ளார்கள். சிலர் பசியால் மடிந்துள்ளார்கள். நீங்கள் எவ்வளவு தொகை கொடுத்தீ்ர்கள் என்று பதில் கூற வேண்டும்’’ என்றார்

    May 31, 2020, 14:07 PM IST

கிரைம் செய்திகள்

டெக்னாலஜி செய்திகள்

சென்னை செய்திகள்

விளையாட்டு செய்திகள்

லைஃப்ஸ்டைல்

பிசினஸ்

சமையல் குறிப்புகள் - ரெசிபி