Latest Tamil News

சினிமா செய்திகள்

விரைவுச் செய்திகள்

  • தெருவுக்கு வாங்கய்யா..

    யஷ்வந்த் சின்கா ட்விட்

    முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா இன்று ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘ஏழைகளின் துயரங்களை கவனிக்காமல், மத்திய அரசு கண்களையும், காதுகளையும் மூடிக் கொண்டிருக்கும் போது, எதிர்க்கட்சிகள் வெறும் மனுக்களை கொடுத்து கொண்டிருப்பது சரியா? இதற்கு மேலும் வெறும் அறிக்கைகள் எதுவும் பலனளிக்காது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் தெருவுக்கு வந்து போராட வேண்டும்’’ என்று கூறியுள்ளார். 

    May 23, 2020, 14:18 PM IST
  • சிறப்பு ரயில்கள் வேண்டாம்..

    மேற்கு வங்கம் கோரிக்கை

    மேற்கு வங்கத்தில் அம்பன் புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், தற்போது சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் எ்னறு அம்மாநில அரசு கோரியு்ள்ளது. இது தொடர்பாக ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவுக்கு தலைமைச் செயலாளர் ராஜு சின்கா கடிதம் அனுப்பியு்ள்ளார், அதில், சிறப்பு ரயிலில் வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பரிசோதனைக்கு உள்ளாக்கி, தனிமைப்படுத்துவதற்கு இயலாத சூழல் உள்ளதால், வரும் 26ம் தேதி வரை சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் எ்னறு கோரப்பட்டுள்ளது. 

    May 23, 2020, 13:57 PM IST
  • மகாராஷ்டிராவில் 44 ஆயிரம்

    பேருக்கு கொரோனா பாதிப்பு

    நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 44,582 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. இதில், 12,583 பேர் குணமடைந்துள்ளனர். 1517 பேர் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர். மாநிலத்தில் மும்பையில்தான் அதிகபட்சமாக 27 ஆயிரம் பேருக்கு கொரானா தொற்று பரவியிருக்கிறது.

     

    May 23, 2020, 13:53 PM IST
  • ஒரு லட்சத்து 6,750 பேருக்கு

    கொரோனா பரவியது..

    நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து  1,139 பேரில் இருந்து  ஒரு லட்சத்து 6,750 பேராக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39,174ல் இருந்து 41,298 ஆக அதிகரித்து்ள்ளது. கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை  3,163ல் இருந்து 3,303 ஆக உயர்ந்துள்ளது.

    May 20, 2020, 13:42 PM IST
  • மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு

    1325 பேர் உயிரிழப்பு

    நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் மிகவும் அதிகமானோருககு கொரோனா பரவியிருக்கிறது. இது வரை 37,136 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதில் 1325 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். காவல்துறையில் மட்டும் 1388 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதில் 428 பேர் குணமடைந்துள்ளனர். 12 பேர் பலியாகியுள்ளனர். 

    May 20, 2020, 13:37 PM IST
  • கோயில்கள் ஜூன் 1ல் திறப்பு

    நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு இம்மாதம் 31ம் தேதியுடன் முடிகிறது. ஜூன் 1ம் தேதி முதல் ஏ.சி. வசதி இல்லாமல் 200 ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் 25 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ளன.

    இதன் தொடர்ச்சியாக ஜூன் 1ம் தேதி முதல் அறநிலையத் துறையின் நிர்வாகத்தில் உள்ள 40 ஆயிரம் கோயில்களும் திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், பக்தர்கள் கூட்டத்தை சமாளிப்பது குறித்தும் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்டவை குறித்தும் அறநிலையத்துறை ஆலோசித்து வருகிறது. 

     

    May 20, 2020, 13:35 PM IST
  • டாஸ்மாக் கடைகளை திறக்க

    தடையில்லை: சுப்ரீம் கோர்ட்

    தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றாமல் குடிமகன்கள் கூட்டம் அலைமோதியதா்ல், கடைகளை மூடுவதற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல் செய்தது. டாஸ்மாக் மூலமாக திரட்டப்படும் நிதியை, மறற துறைகளின் மூலம் திரட்டுவதென்றால், 5 ஆ்ண்டுகளாகி விடும் என்று வாதிட்டது. இதை ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட், தமிழகத்தில் டாஸ்மாக் கடை திறப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கியது. அதனால், சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் நாளை முதல் டாஸ்மாக் மதுக் கடைகள் திறக்க வாய்ப்புள்ளது. 

    May 15, 2020, 13:33 PM IST
  • சென்னையில் 6 டாக்டர்களுக்கு
    கொரோனா பாதிப்பு
     
    சென்னை அரசு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பெண் டாக்டர் ஒருவர் உள்பட 4 மருத்துவ மேற்படிப்பு மாணவிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.  மருத்துவப் மேற்படிப்பு ஆண்கள் விடுதியில் 2 மேற்படிப்பு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 6 டாக்டர்களுக்கு கொரோனா பரவியிருக்கிறது.
     
    May 15, 2020, 13:27 PM IST
  • இந்தியாவுக்கு நூறு கோடி டாலர்

    உலகவங்கி வழங்குகிறது..

    இந்தியாவுக்கு உலக வங்கி, நூறு கோடி டாலர்(சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய்) கடனுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. சுகாதாரம், சமூக பாதுகாப்பு, சிறுகுறுநடுத்தர தொழில் வளர்ச்சி ஆகியவற்றுக்காக இந்த நிதியுதவி அளிக்கப்படுகிறது என்று உலக வங்கியின் இயக்குனர் ஜுனைத் அகமது தெரிவித்து்ள்ளார். 

    May 15, 2020, 13:21 PM IST
  • திமுக மாவட்டச் செயலர்களுடன்

    ஸ்டாலின் நாளை ஆலோசனை

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பில், ‘‘நாளை(மே16) காலை 10,30 மணிக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், வீடியோ கான்பரன்சில் நடைபெறும். அதில் கொரோனா பரவியுள்ள நிலையில், கட்சி ஆற்றும் பணிகள் குறித்து விவாதிக்கப்படும்’’ என்று கூறியுள்ளார். 

    May 15, 2020, 13:19 PM IST

கிரைம் செய்திகள்

டெக்னாலஜி செய்திகள்

சென்னை செய்திகள்

விளையாட்டு செய்திகள்

லைஃப்ஸ்டைல்

பிசினஸ்

சமையல் குறிப்புகள் - ரெசிபி