Recent News

with-5-609-new-cases-india-s-covid-19-tally-reaches-1-12-359

இந்தியாவில் இது வரை ஒரு லட்சத்து 12,359 பேருக்கு கொரோனா பாதிப்பு..

இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை, ஒரு லட்சத்து 12,359 பேராக அதிகரித்துள்ளது.இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. நேற்று வரை ஒரு லட்சத்து 1139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

May 21, 2020, 21:19 PM IST

trump-sharpens-attack-on-china-on-covid-19

சீனா வேண்டுமென்றே கொரோனா பரப்பியது.. டிரம்ப் மீண்டும் பாய்ச்சல்.

சீனா வேண்டுமென்றே உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் நோயைப் பரப்பி விட்டிருக்கிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் 90 நாடுகளுக்கு பரவியது. அதிகபட்சமாக, அமெரிக்காவில் 15 லட்சம் பேருக்கு இந்த நோய் தாக்கியுள்ளது. இதில் 94 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.

May 21, 2020, 21:13 PM IST

cyclone-amphan-likely-to-maintain-intensity-of-cyclonic-storm-till-tomorrow-morning

கரை கடந்தது அம்பன் புயல்.. மே.வங்கம், ஒடிசாவில் வீடுகள், மரங்கள் சாய்ந்தன..

மேற்கு வங்கத்திலும், ஒடிசாவிலும் பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டு அம்பன் புயல் கரை கடந்தது. மேற்குவங்கத்தில் பல மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. கொல்கத்தா விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

May 21, 2020, 21:10 PM IST

corona-cases-in-tamilnadu-rises-to-13-191

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 13 ஆயிரம் தாண்டியது.. சென்னையில் 8228 பேருக்கு பரவியது..

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 13 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சென்னையில் மட்டுமே இது வரை 8228 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவில் குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு மாநிலங்களில் அதிகம் பேருக்கு பரவியுள்ளது.

May 21, 2020, 21:04 PM IST

tamilnadu-gets-tax-share-rs-2000-cr-from-centre

தமிழகத்திற்கு ரூ.2224 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு..

மத்திய அரசின் வரிவருவாயில் இருந்து ரூ.1928 கோடியும், உள்ளாட்சி மானியமாக ரூ.295 கோடியுமாக மொத்தம் ரூ.2223.81 கோடி தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.ஜி.எஸ்.டி உள்ளிட்ட வரி வருவாயிலிருந்து மாநிலங்களுக்கு மத்திய அரசு பிரித்துக் கொடுக்கும்.

May 21, 2020, 20:56 PM IST


cyclone-amphan-likely-to-maintain-intensity-of-cyclonic-storm-till-tomorrow-morning

அம்பன் புயல் சீற்றம்.. நாளை காலை வலுவிழக்கும்.. ஒடிசாவில் மரங்கள் சாய்ந்தன..

மேற்கு வங்கம் அருகே வங்கக் கடலில் அம்பன் புயல் கொஞ்சம், கொஞ்சமாக வலுவிழந்து நாளை காலை வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கக் கடலில் உருவான அம்பன் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக் கடலில் ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்திலிருந்து 480 கி.மீ. தொலைவில் நேற்று மையம் கொண்டிருந்தது.

May 20, 2020, 14:55 PM IST

sharad-pawar-offers-suggestions-to-reopen-covid-19-hit-maharashtra

கொரோனா பாதிப்பு.. மகாராஷ்டிரா அரசுக்கு பவார் கூறிய யோசனைகள்..

கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சரிசெய்ய மகாராஷ்டிர அரசுக்கு சரத்பவார் சில யோசனைகளைக் கூறியுள்ளார்.நாட்டிலேயே கொரோனவால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவில் தற்போது ஊரடங்கு நீடிக்கிறது.

May 20, 2020, 14:52 PM IST

one-lakh-evacuated-in-odisha-as-cyclone-amphan-hurtles-towards-bengal-coast

அம்பன் புயல் தீவிரம்.. ஒடிசாவில் முகாம்களில் ஒரு லட்சம் பேர் தஞ்சம்..

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள அம்பன் புயல், இன்று பிற்பகலில் மேற்குவங்கம் மற்றும் வங்கதேசம் இடையே கரை கடக்கிறது. புயலின் தீவிரம் காரணமாக ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் ஒரு லட்சம் பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

May 20, 2020, 09:38 AM IST

railways-to-run-200-nonac-trains-daily-from-june1

ஜூன் 1ம் தேதி முதல் ஏ.சி. பெட்டிகள் இல்லாத 200 ரயில்கள் ஓடும்..

கொரோனா ஊரடங்கு முடிந்ததும் ஜூன் 1ம் தேதி முதல் ஏ.சி. பெட்டிகள் இல்லாமல், 200 ரயில்கள் விடப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.கொரோனா பரவாமல் தடுப்பதற்காகப் பிரதமர் மோடி அறிவிப்பின்படி, நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

May 20, 2020, 09:33 AM IST

corona-cases-in-tamilnadu-rises-to-12-448

சென்னையில் கொரோனா பரவல் குறையவில்லை.. இது வரை 7672 பேர் பாதிப்பு..

தமிழகத்தில் இது வரை 12,448 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. இதில் 4895 பேர் குணமடைந்துள்ளனர். 84 பேர் பலியாகியுள்ளனர்.தமிழக அரசு நேற்று(மே19) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக 688 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.

May 20, 2020, 09:30 AM IST