அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்களின் கலவரங்களுக்கு இடையே ஜோ பிடன் வெற்றி, நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, டிரம்ப், அரசு நிர்வாகத்தை ஒப்படைப்பதாகக் கூறி, அடங்கினார்.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது.
சென்னையில் நடந்த கருத்தரங்கில், ஆன்மீக அரசியலுக்கு விளக்கம் கொடுத்தார் மு.க.ஸ்டாலின்.திமுக சிறுபான்மையினர் அணியின் சார்பில், நல்லாட்சி மலர்ந்திட இதயங்களை இணைப்போம் என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கம் நடைபெற்றது.
சசிகலா, எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது டி.டி.வி.தினகரன் கடுமையாகத் தாக்கியுள்ளார். நெஞ்சம் முழுக்க அழுக்கும், துர்சிந்தனையும் நிரம்பிய ஒருவரால்தான் இப்படி வக்கிரமாகப் பேச முடியும் என்று அவர் கூறியுள்ளார்
ஜெயலலிதா செய்த மிகப் பெரிய தவறு எடப்பாடி பழனிசாமிக்குத் தெரியுமா? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.திமுக சிறுபான்மையினர் அணி சார்பாக நல்லாட்சி மலர்ந்திட இதயங்களை இணைப்போம் என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
ரஜினி அரசியலுக்கு வர வேண்டுமென்று கட்டாயப்படுத்தும் போராட்டத்திற்காகச் சிலர் நிதி வசூல் செய்வதாகவும், அது மிகவும் வருந்தத்தக்கது என்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி கூறியுள்ளார்.நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டுமென பல ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்திருந்தாலும், நேற்றும் புதிதாக 811 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றி பல நாடுகளுக்குப் பரவிய கொரோனா தொற்று இந்தியாவிலும் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் கொரோனா தொற்று நோய் வேகமாகப் பரவியது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அ.தி.மு.கவின் மேலிடம் வரை தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டுமென்று சி.பி.ஐ.க்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட மேலும் 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அவர்கள் ஏன் வயதான பெண்ணிடம் தொடர்பு வைக்கணும்? என்று காங்கிரசின் மூத்த பெண் தலைவரை ஆபாசமாக பாஜக தலைவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியை நோக்கி ஜன.26ம் தேதி டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஹரியானாவில் உள்ள விவசாயிகளிடம் வீட்டுக்கு ஒருவரை அனுப்புமாறு வலியுறுத்தவுள்ளனர்.