Recent News

dmk-leader-v-p-duraisamy-to-join-bjp-today

பாஜகவில் சேர்ந்தார் வி.பி.துரைசாமி.. புதிய பதவி கிடைக்குமாம்..

திமுகவிலிருந்து விலகிய வி.பி.துரைசாமி, இன்று பாஜக தலைவர் முருகன், மூத்த தலைவர் இல.கணேசன் ஆகியோரை சந்தித்து அக்கட்சியில் சேர்ந்தார்.திமுக துணைப் பொதுச் செயலாளராக நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வி.பி.துரைசாமி இருந்து வந்தார்.

May 22, 2020, 12:24 PM IST

sonia-gandhi-to-hold-opposition-meet-on-covid19-situation

கொரோனா பாதிப்பு.. எதிர்க்கட்சி தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை..

கொரோனா பாதிப்பு நிலவரம், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்களின் வீடியோ கான்பரன்ஸ் ஆலோசனைக் கூட்டம், இன்று மாலை நடைபெறுகிறது.இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 20 ஆயிரத்தைத் தொட்டுள்ளது.

May 22, 2020, 12:20 PM IST

covid-19-cases-in-india-rises-to-1-18-lakh

இந்தியாவில் ஒரே நாளில் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா..

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 6,088 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சீனாவின் உகான் நகரில் தோன்றி உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவியிருக்கிறது. இந்தியாவில் தினமும் புதிதாக நான்கைந்து ஆயிரம் பேருக்காவது கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது.

May 22, 2020, 10:17 AM IST

dmk-leader-v-p-duraisamy-to-join-bjp-today

பிராமணர் கட்சியில் சேரும் வி.பி.துரைசாமி..

திமுகவில் துணை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட வி.பி.துரைசாமி, பாஜகவில் சேருகிறார்.திமுகவில் மூத்த தலைவர்களில் ஒருவரான வி.பி.துரைசாமி, துணைப் பொதுச் செயலாளராக இருந்து வந்தார்.

May 22, 2020, 09:46 AM IST

corona-cases-still-increasing-in-chennai

சென்னையில் தொடரும் கொரோனா பரவல்... பாதிப்பு 8795 ஆக உயர்வு..

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 14 ஆயிரத்தை நெருங்குகிறது. அதிகபட்சமாக, சென்னையில்தான் இது வரை 8795 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது.சீனாவின் உகான் நகரில் தோன்றி, உலகம் முழுவதும் 100 நாடுகளுக்கு மேல் பரவியிருக்கிறது கொரோனா வைரஸ் நோய்.

May 22, 2020, 09:39 AM IST


a-portion-of-kolkata-airport-flooded-in-wake-of-cycloneamphan

கொல்கத்தா ஏர்போர்ட்டில் புயலால் பலத்த சேதம்... விமானச் சேவை தாமதமாகும்..

கொல்கத்தா விமான நிலையத்தில் அம்பன் புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால், விமான நிலையமே மூடப்பட்டுள்ளது.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

May 21, 2020, 21:26 PM IST

india-will-resume-domestic-flights-beginning-may-25

உள்நாட்டு விமானச் சேவை மே25ம் தேதி தொடங்கும்.. புதிய விதிமுறைகள் வெளியீடு..

இந்தியாவில் வரும் 25ம் தேதி முதல் விமானப் போக்குவரத்து தொடங்கவுள்ளது. இதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின், மூன்று முறை நீட்டிக்கப்பட்டு மே 31ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

May 21, 2020, 21:21 PM IST

with-5-609-new-cases-india-s-covid-19-tally-reaches-1-12-359

இந்தியாவில் இது வரை ஒரு லட்சத்து 12,359 பேருக்கு கொரோனா பாதிப்பு..

இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை, ஒரு லட்சத்து 12,359 பேராக அதிகரித்துள்ளது.இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. நேற்று வரை ஒரு லட்சத்து 1139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

May 21, 2020, 21:19 PM IST

trump-sharpens-attack-on-china-on-covid-19

சீனா வேண்டுமென்றே கொரோனா பரப்பியது.. டிரம்ப் மீண்டும் பாய்ச்சல்.

சீனா வேண்டுமென்றே உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் நோயைப் பரப்பி விட்டிருக்கிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் 90 நாடுகளுக்கு பரவியது. அதிகபட்சமாக, அமெரிக்காவில் 15 லட்சம் பேருக்கு இந்த நோய் தாக்கியுள்ளது. இதில் 94 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.

May 21, 2020, 21:13 PM IST

cyclone-amphan-likely-to-maintain-intensity-of-cyclonic-storm-till-tomorrow-morning

கரை கடந்தது அம்பன் புயல்.. மே.வங்கம், ஒடிசாவில் வீடுகள், மரங்கள் சாய்ந்தன..

மேற்கு வங்கத்திலும், ஒடிசாவிலும் பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டு அம்பன் புயல் கரை கடந்தது. மேற்குவங்கத்தில் பல மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. கொல்கத்தா விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

May 21, 2020, 21:10 PM IST