அட! நம்ம பரோட்டா சூரியா இது!

வெண்ணிலா கபடி குழு படத்தில் ‘பரோட்டா’ காமெடி மூலம் பிரபலமான பரோட்டா சூரி தற்போது அடையாளமே தெரியாமல் சிக்ஸ்பேக் சூரியாக மாறியுள்ளார்.

Parotta Suri Six pack

பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், சமந்தா, கீர்த்தி சுரேஷ் சிம்ரன், நெப்போலியன் என நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ள 'சீமராஜா' படத்திற்காக முதன்முறையாக சூரி, சிக்ஸ்பேக் வைத்து அசத்தியுள்ளார்.

இந்தப் புகைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்காக சூரி 8 மாதங்களாக கடின உடற்பயிற்சி செய்ததாகவும், இந்தப் புகைப்படத்தை பகிர்வதில் தனக்கு மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

மேலும், இந்த புகைப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் சூரியின் கடின உழைப்பை பாராட்டி வருகின்றனர். சிவகார்த்திகேயன் வெளியிட்ட 11 மணி நேரங்களில், 32 ஆயிரம் ஹார்ட்டின்களும், 6 ஆயிரம் ரீடிவீட்டுகளும், 814 கமெண்டுகளையும் இந்த புகைப்படம் அள்ளியுள்ளது.

மூடர்கூடம் படத்தின் இயக்குநர் நவீன், “ஜாக்கி ஜட்டியின் சிறந்த மாடல் கூட, இவருக்கு ஈடாக மாட்டார். இதுக்கு பேருதான் நாட்டு ஒடம்போ’ என பாராட்டியுள்ளார்.

சூரியை அறிமுகப்படுத்திய இயக்குநர் சுசீந்திரன் சீமராஜா படத்திற்கும், சூரிக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும், பல பிரபலங்களும் இதனை ஷேர் செய்தும் பாராட்டியும் வருகின்றனர்.

சூரி அண்ணே! 41 வயதில் இந்த ’டீ டிக்காஷன்’ உங்களை எங்கேயோ கொண்டு போகும்ணே!

Latest Photos of the News

 

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

 

Recent Videos

Recent News

 

 

Most Read News