இரட்டை வேடத்தில் நயன்தாரா.. ஐரா படத்தின் டீஸர் ரிலீஸ்

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் ஐரா படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.

கே.எம்.அர்ஜூன் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம ஐரா. திரில்லர் படமான இதில் நயன்தாரா முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்தில், நயன்தாராவை தவிர, கலையரசன், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள ஐரா படத்திற்கு கார்த்திக் ஜோகேஷ் இசை அமைத்துள்ளார்.

படப்படிப்புகள் முடிவடைந்த, படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில், ஐரா படத்தின் டீஸர் நேற்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

Recent News