விஸ்வாசம்.. அஜித் ரசிகர்களுக்கு இனிப்பான பொங்கல் விருந்து

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடித்து இன்று திரையில் வெளியாகியுள்ள படம் விஸ்வாசம் பக்கா பொழுதுபோக்கு மற்றும் குடும்பப்படம் என்று ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படுகிறது.

சிவா - அஜித் கூட்டணியில் வெளிவந்த படங்களில் விஸ்வாசம் சிறந்த படம் என்று சொல்லலாம். இரண்டு கெட்டப்களில் வரும் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். பெரிய படத்தில் ஹீரோயினுக்கு ஒரு சின்ன ரோல் என்று இல்லாமல், நயன்தாராவுக்கு முக்கிய ரோல் இந்த படத்தில் வழங்கப்பட்டுள்ளது. அதில், நயன்தாரா சிறப்பாக நடித்துள்ளார்.

விஸ்வாசத்தில் காமெடிக்கு பஞ்சமில்லை என்றே செல்லலாம். ஏன்னா, விவேக், யோகி பாபு, தம்பி ராமைய்யா, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். இவர்களின் கூட்டணியால் உருவாகியுள்ள காமெடி காட்சிகள் பல இடங்களில் ரசிகர்களின் கைதட்டல்களை வாங்கியுள்ளது.

டி.இமான் இசையில் கண்ணான கண்ணே, அடிச்சு தூக்கு உள்ளிட்ட பாடல்கள் ஹிட். கண்ணான கண்ணே பாடல் காட்சிகள் மனதை தொடும் பாடலாக அமைந்துள்ளது. அடிச்சு தூக்கு பாடலின் இறுதியில் அஜித் ஆடியிருக்கும் குத்தாட்டம் ரசிகர்களுக்கு விருந்து.
சென்டிமென்ட்ஸ், இமோஷனல் நிறைந்த விஸ்வாசம் ஒரு குடும்பப்படம் என்றே கூறலாம். குடும்பத்தோடு சென்று பார்க்கக்கூடிய பொழுதுபோக்குக்கான படம் விஸ்வாசம்.

வழக்கமான கதை தான் என்றாலும், அஜித் ரசிகர்களுக்கு விஸ்வாசம் பக்கா பொங்கல் விருந்து.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

Recent News