மொறு மொறுப்பான வாழைப்பூ பக்கோடா ரெசிபி

சத்தான மாலை நேர உணவு வாழைப்பூ பக்கோடா எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

வாழைப்பூ - 1

மிளகாய்த் தூள் - ஒன்றரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 3

கடலை மாவு - 200 கிராம்

அரிசி மாவு - 150 கிராம்

பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன்

பெருங்காயத் தூள் - அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய் - பொரிப்பதற்கு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில், வாழைப் பூவை தனித்தனியாக பிரித்து எடுத்து தண்ணீரில் அலசி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வாழைப் பூ, அரிசி மாவு, கடலை மாவு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகாயத் தூள், பேக்கிங் சோடா, பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.

பிறகு, கொஞ்சமாக தண்ணீர் தெளித்து பிசைந்துக் கொள்ளவும்.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வாழைப் பூவை உதிரி உதிரியாக தூவி பொரிக்கவும்.

வாழைப் பூ பொன்னிறதமாக மாறியதும் எடுத்து பரிமாறவும்.

அவ்ளோதாங்க.. சுவையான வாழைப் பூ பக்கோடா ரெசிபி ரெடி..!

More News >>