சுடச்சுட மசாலா டீ ரெசிபி

மூளையை சுறுசுறுப்பாக செயல்பட உதவும், மசாலா டீ எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

பால் - 2 தம்ளர்

வெல்லம் - 2 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் - 100 மிலி

இஞ்சி - ஒரு துண்டு

ஏலக்காய் - 4

பட்டை - ஒரு துண்டு

டீத்தூள் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும்.

பிறகு, இஞ்சி, ஏலக்காய், பட்டையை நன்றாக இடித்து கொதிக்கும் தண்ணீரில் சேர்க்கவும்.

பின்னர், டீத்தூள் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். பாதியளவு டீ டிக்காஷன் குறைந்ததும், பால், வெல்லம் சேர்த்து கலக்கி கொதிக்கவிடவும்.

பால் பொங்கி வரும்போது கலக்கிக் கொண்டே இருக்கவும். டிக்காஷன் பாலில் முழுவதுமாக இறங்கியதும் இறக்கி வடிகட்டவும்.

அவ்ளோதாங்க.. சுவையான மசாலா டீ ரெடி..!

More News >>