கமகமக்கும் சுக்கு மல்லி காபி ரெசிபி
உடலுக்கு நன்மைத் தரும் சுக்கு மல்லி காபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
சுக்கு - சிறிதளவு
மல்லி விதை - 1 டீஸ்பூன்
பணங்கற்கண்டு அல்லது கருப்பட்டி - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியில் மல்லி விதையை போட்டு மிதமான சூட்டில் வறுக்கவும்.
பிறகு, மல்லி விதையையும், சுக்குவையும் இடித்து பொடியாக்கவும்.
அதே வாணலியில், இடித்து வைத்த சுக்கு, மல்லி விதை, பணங்கற்கண்டு அல்லது கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்த்து, மேலும் ஒன்றறை தம்ளர் தண்ணீர் சேர்த்து ஒரு தம்ளர் அளவுக்கு சுண்டும் வரை கொதிக்கவிடவும்.
இதனை வடிகட்டினால் சுவையான சுக்கு மல்லி காபி ரெடி..!