அடுத்த ஐபிஎல் கப் நமக்குத்தான்.. சென்னை ரசிகர்களின் அன்புக்கு தலைவணங்கிய ஷேன் வாட்சன்!

இந்த ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை பறிகொடுத்தது. சென்னை அணி சரிவில் இருந்த போது காலில் பட்ட காயத்தையும் பொருட்படுத்தாது 80 ரன்கள் அடித்த ஷேன் வாட்சனின், தியாகம் குறித்து, புகைப்படத்துடன் ஹர்பஜன் சிங் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதை அறிந்த சென்னை ரசிகர்கள், ஷேன் வாட்சனின் டெடிகேஷன் குறித்து பாராட்ட துவங்கினர்.

பாகுபலி பட போஸ்டர்களை எல்லாம் மீம்களாக போட்டு, கோப்பையை விட ஷேன் வாட்சன் உயர்ந்து விட்டார் என அவருக்கு புகழாரம் சூடினர். அன்றைய போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக வாட்சனுக்கு 6 தையல்கள் போடப்பட்டதையும் ஹர்பஜன் தனது பதிவில் குறிப்பிட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

இந்நிலையில், சென்னை ரசிகர்களின் அன்பு குறித்து அறிந்த ஷேன் வாட்சன், உங்களின் அன்புக்கு நன்றி, அடுத்த ஆண்டு மீண்டும் வருவோம், அடுத்த ஐபிஎல் கோப்பையை இதே போல போராடி வெல்வோம் என பேசியுள்ள வீடியோவை பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் சென்னை அணி ரசிகர்களால் வேகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

ஆரம்பத்தில் ஷேன் வாட்சனுக்கு வயதாகி விட்டது என்றும், அவர் ஃபார்மில் இல்லையென்றும் கலாய்த்து வந்த சென்னை ரசிகர்கள் இறுதியில் அவரது அனுபவம் வாய்ந்த ஆட்டத்தை பார்த்து மெய் சிலிர்த்து போனார்கள்.

திருப்பதியில் பேருந்து கவிழ்ந்து விபத்து; 10பேர் காயம்
More News >>