தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடும் வகையில், ரயில் முன்பதிவு தொடங்கியது
அக்டோபர் 27-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், சென்னையில் அலுவலக வேலை காரணமாகவும், கல்லூரி படிப்பிற்காகவும், பல்வேறு பணிகளுக்காகவும், வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும், வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், சென்னையிலிருந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு சொந்த ஊர்களுக்கு செல்ல வெளிமாவட்டம் மற்றும் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தீபாவளி பண்டிகைக்கு ரயில் முன்பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர். அதன்படி, 120 நாட்களுக்கு முன்பே ரயில் முன்பதிவு தொடங்கும் நிலையில், அக்டோபர் 22-ஆம் தேதிக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
மேலும், அக்டோபர் 23ஆம் தேதிக்கான முன்பதிவு நாளையும், 24ஆம் தேதிக்கான முன்பதிவு நாளை மறுநாளும் நடைபெற உள்ளது. இந்நிலையில், அக்டோபர் 27ஆம் தேதி தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு, 26ஆம் தேதிக்கான முன்பதிவு வரும் 28ம் தேதியும், 25 ஆம் தேதிக்கான முன்பதிவு வரும் 27ம் தேதியும் நடைபெறும் என ரயில்வே நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமும், காலை 8 மணிக்கு முன்பதிவு அனைத்து ரயில் நிலையங்களிலும், ஆன்லைன் மூலமாகவும், தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-தமிழ்
தெலுங்கானா : தர்ஹாவிற்கு சென்று திரும்பிய 4 பேர் விபத்தில் சிக்கி பலி