சத்தான முருங்கைக்கீரை சாம்பார் ரெசிபி
சத்து நிறைந்த முருங்கைக்கீரையைக் கொண்டு சாம்பார் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
முருங்கைக்கீரை - ஒரு கப்
துவரம் பருப்பு - ஒரு கப்
வெங்காயம் - 1
தக்காளி - 2
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
சாம்பர் பொடி - ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் - அரை டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 5
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை
எண்ணெய
உப்பு
செய்முறை:
முதலில் முருங்கைக்கீரையை அலசி சுத்தம் செய்து வைக்கவும்.
துவரம் பருப்பை சுமார் கால் மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து துவரம் பருப்பு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், சாம்பார் பொடி, மல்லித்தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து சுமார் 5 விசில்விட்டு வேகவிடவும்.
பருப்பு நன்றாக வெந்ததும் அதை கடைந்து, கொதிக்கவிடவும்.பிறகு, முருங்கைக்கீரையை சேர்த்து கலந்து சுமார் 3 & 4 நிமிடங்களுக்கு கொதிக்கவிடவும்.
இடையே, வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, சீரகம், வெந்தயம், நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பொரித்து சாம்பாரில் சேர்த்து தாளித்து இறக்கவும்.
சுவைமிக்க முருங்கைக்கீரை சாம்பார் ரெடி..!