சினிமாவை விட்டு ரஜினி வெளியேற முடிவு...பாலசந்தர் சிலை திறப்பில் கமல் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்...

திரைப்பட இயக்குனர் மறைந்த கே.பாலசந்தர் சிலையை ரஜினி, கமல்ஹாசன் இணைந்து திறந்து வைத்தனர். கமல்ஹாசன் திரையுலகிற்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அவரை பாராட்டும் வகையில் 3 நாட்கள் விழா நடக்கிறது. நேற்று பரமகுடியில் தனது தந்தை சீனிவாசன் சிலையை கமல் திறந்து வைத்தார். இன்று சென்னையில் உள்ள ராஜ்கமல் அலுவலகத்தில்  கே.பாலசந் தரின் மார்பளவு சிலை திறப்பு விழா நடந்தது.   நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். கமல், ரஜினி இணைந்து சிலையை திறந்து வைத்தனர். பின்னர் இருவரும் இணைந்து உருவச் சிலைக்கு  மாலை அணிவித்தனர். ரஜினி, கமல் இருவருக்குமே திரையுலக குரு கே.பாலசந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்ச்சியல் ரஜினிகாந்த் பேசியதாவது: கமல்ஹாசனுக்கு நேற்றும் இன்றும் மிகமுக்கிய நாட்கள் ஆகும். அவர் நடித்த ஹேராம் படத்தை நான் முப்பது, நாற்பது முறை பார்த்திருக்கிறேன். அபூர்வ சகோதர்கள் படத்தை பார்த்துவிட்டு நள்ளிரவில் கமல் வீட்டுக்கு சென்று அவரை பாராட்டினேன். டைரக்டர் கே.பாலசந்தர் ஒரு மகான்.   அவருக்கு சிலை வைத்தது பொருத்தமான விஷயம். என்னை தமிழ் கற்கச் சொல்லி உச்சத்துக்கு கொண்டு வந்தவர் பாலசந்தர்தான். பாலசந்தர் சாருக்கு மிகவும் பிடித்த கலைக் குழந்தை கமல். அவர் நடிக்கும் ஒவ்வொரு அசைவையும் ரசிப்பார். ராஜ்கமல் தயாரித்த தேவர் மகன் மிகப் பெரிய காவியம். கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தாலும் தாய் வீடான சினிமாவை மறக்கவில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் கமல்.     கமல்ஹாசன் பேச்சு:திரைப்பட விழாவில் தகுதியான நபரை (கோவா தொரைப்பட விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது) பாராட்ட உள்ளனர். 43 வருடம் தாமதமாக அவருக்கு விருது தருகிறார்கள். சினிமா வில் நடிக்க வந்த முதல் வருடத்திலேயே ரஜினிகாந்த் ஸ்டார் அந்தஸ்த்துக்கு வந்து விட்டார்.  ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டுவிட்டு செல்லப்போவதாக ரஜினி கூறிய போது அதிர்ந்து போய்விட்டேன். சினிமாவை விட்டு போனால் நடப்பதே வேறு என்று நான் ரஜினியிடம் கூறினேன். ரஜினி சினிமாவை விட்டு சென்று இருந்தால் என்னையும் சினிமாவில் இருந்து அனுப்பிவிடுவார்கள்.   நானும் ரஜினியும் யார் என்பதில் நாங்கள் இருவருமே தெளிவாக இருக்கிறோம். சினிமாவில் நடன கலையை போன்று என் பாணி வேறு, ரஜினி பாணி வேறு. இருவரும் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று நானும் ரஜினியும் செய்துகொண்ட ரகசிய ஒப்பந்தம் இன்றுவரை நீடிக்கிறது. எங்களை நாங்களே பாராட்டிக்கொள் வோம், விமர்சித்துக்கொள்வோம். நாங்கள் இருவரும் எதையும் பேசிக்கொள் வோம். சண்டை போடும் எங்கள் ரசிகர்கள் நாங்கள் என்ன பேசிக்கொண் டோம் என்று கேட்டால் அவர்களுக்கு வியப்பாக இருக்கும். அன்றைக்கு நானும் ரஜினியும் கனவு கண்டதை இன்று நிஜமாக்கிக் கொண்டிருக்கிறோம்.   இவ்வாறு கமல் கூறினார்.   இந்நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து, டைரக்டர் மணிரத்னம், பாலசந்தர் மகள் புஷ்பா கந்தசாமி, நடிகர் நாசர், கமல் மகள் ஸ்ருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.
More News >>