அம்மன் வேடத்தில் நயன்தாரா.. சூலம் ஏந்துவது ஏன்?

நானும் ரவுடிதான் படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா ஜோடியுடன் காமெடி வேடத்தில் நடித்தவர் ஆர்.ஜே. பாலாஜி. ஓரிரு படத்தில் காமெடியனாக நடித்தவர் எல்.கே.ஜி படத்தில் கதையின் நாயகனாக நடித்தார். நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது நயன்தாராவுடன் கிடைத்த நட்பால் அவரை சந்தித்துத் தான் இயக்கும் அம்மன் படத்தில் நடிக்கக் கேட்டார். கதை கேட்டு நயன்தாராவுக்குப் பிடித்துவிடவே நடிக்கச் சம்மதித்தார்.

அந்த படம் தான் மூக்குத்தி அம்மன். கடந்து ஒருமாதத்துக்கு முன் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. அம்மன் வேடத்திற்காக நயன்தாரா விரதம் இருந்து நடித்தார். ஐசரி கணேஷ் தயாரித்திருக்கிறார். பக்தி படமாக உருவாகும் இதில் நயன்தாரா அம்மன் வேடத்தில் நடிக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. சூலம் ஏந்தியபடி நயன்தாரா எந்த எதிரியை அழிக்க நிற்கிறார் என்று ரசிகர்கள் கேட்டு மெசேஜ் பகிர்ந்திருக்கின்றனர்.

More News >>