நோய் எதிர்ப்பு சக்திக்கு ராஜா இசை..

பாகுபலி இசை அமைப்பாளர் சொல்கிறார்..

ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்துக்கு இசை அமைத்தவர் எம்.எம்.கீர வாணி. கொரோனா வராமல் தடுக்க உடலில் எதிர்ப்புச் சக்தி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். இதனால் வைட்டமின் சி சக்தி உள்ள உணவுகளைத் தேடித் தேடி சாப்பிடுகின்றனர்.ஆனால் இசை அமைப்பாளர் கீரவாணி என்ன சொல்கிறார் என்று கேட்டால் ஆச்சரியப்பட்டுப் போவார்கள்.

'இனிப்பு சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி குறையும் அதனால் இனிப்புகளைக் குறைத்துவிட்டேன். அதற்குப் பதிலாக இளையராஜாவின் பாடல்களில் இருக்கும் இனிமை நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்' என்று கூறி இருக்கிறார்.

More News >>