கொரோனா தொற்றால் பிரபல நடிகர் திருமணம் தள்ளிவைப்பு?

பிரபாஸ், ராணா, அனுஷ்கா நடித்த படம் பாகுபலி.ராஜமவுலி டைரக்ட் செய்தார். நடிகர் ராணாவுக்கு சமீபத்தில் அவரது காதலி மிஹீகாவுடன் திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் உள்ள ராமோசஜி ராவ் ஸ்டுடியோவில் நடந்தது. பிறகு ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக ராணா திருமணம் தள்ளிவைக்கப்பட உள்ளது. கொரோனா தொற்று தடை காலம் நீடிப்பதுடன் நோய்த் தொற்று கட்டுக்குள் வராததால் இந்த முடிவை குடும்பத்தினர் எடுத்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அது குறித்து டிவிட்டர் பக்கத்தில் பதில் அளித்திருக்கும் ராணா., திட்டமிட்டபடி ஆகஸ்ட் 8 ம் தேதி திருமணம் நடக்கும் எனத் தெரிவித்திருக்கிறார்.

More News >>