ஸ்வப்னா சுரேஷுக்கு திடீர் நெஞ்சு வலி..!

கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆளும் சிபிஐ அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றும் அளவுக்கு இந்த விஷயம் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் காரணம் ஸ்வப்னா சுரேஷ் என்ற பெண். இவர்தான் 30 கிலோ தங்கத்தை அமீரகத்தில் இருந்து கேரளாவுக்கு அரசின் உதவியோடு கடத்தினார். இந்த விவகாரத்தில் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவரது பினாமியாகச் சொல்லப்படும் சந்தீப் நாயர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகளும் என்ஐஏ அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில், ஸ்வப்னாவுடன் முதல்வரின் செயலாளராக இருந்த சிவசங்கரன் ஐஏஎஸ், உட்பட பலருக்கு தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக சிவசங்கரன் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிறையில் உள்ள ஸ்வப்னா சுரேஷுக்கு சில மணி நேரங்கள் முன்பு திடீர் நெஞ்சு வலி வந்துள்ளது. இதையடுத்து அவர் உடனே திருச்சூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு முதல்கட்ட சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. எனினும் அவரின் உடல்நிலை குறித்து எந்தவித தகவலும் இன்னும் வெளியாகவில்லை.

More News >>