வீட்டை இடிக்கும் பாசிச ஆட்சி - கங்கனா மீண்டும் தாக்கு..

மகாரஷ்டிரா ஆளும் கட்சி சிவசேனா வுடன் மோதி வரும் கங்கனா ரனாவத் மும்பை இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மிர் போல் என பேசினார். அதற்கு ஆளும் மகாராஷ்டிரா சிவசேனா, கங்கனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், கங்கனாவை கடுமையாக கண்டித் ததுடன் அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார். இதற்கிடையில் கங்கனா ரணாவத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கியது. மும்பையில் உள்ள கங்கனா வீட்டில் அனுமதி பெறாமல் சட்டவிரோத கட்டுமான பணிகள் மேற்கொள்ளப் பட்டிருப்பதாக மும்பை மாநகராட்சி கங்கனா வீட்டு கட்டிடத்தின் முகப்பில் நோட்டிஸ் ஒட்டியது. இன்று காலை 11 மணியளவில் 12.30 மணிக்கு கங்கனா வீட்டின் ஒரு பகுதி இடித்தது.

போலீசாருடன் வந்த பி.எம்.சி எச்-வெஸ்ட் வார்டு அதிகாரிகளின் குழு ஜே.சி.பி.க்கள், புல்டோசர்கள் மற்றும் கனரக வாகனங் களுடன் கங்கனாவின் அலுவலகத்தை இடிக்கத்தனர்.மும்பை மாநகராட்சியின் நடவடிக்கை குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித் துள்ள கங்கனா, எனது வீட்டில் சட்ட விரோத கட்டுமானம் எதுவும் இல்லை, செப்டம்பர் 30 ஆம் தேதி வரை கொரோனா காரணமாக எந்த இடிப்பை யும் செய்யக்கூடாது என அரசாங்கம் தடை செய்துள்ளது, இப்போது இது பாசிசம் போல் தோன்றுகிறது என பதிவிட்டுள்ளார்.மற்றொரு டிவிட்டில், நான் ஒருபோதும் தவறு செய்யவில்லை, என் எதிரிகள் மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்கள், இதனால்தான் மும்பை இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மிர் போல் உள்ளது என பதிவிட்டுள்ளார். அத்துடன் மாநகராட்சியினர் தனது வீட்டை இடிக்கும் படங்களை வெளியிட்டு பாபர் மற்றும் அவருடைய ஆர்மி என தெரிவித் துள்ளனர்.

More News >>