2 அமைச்சர்கள், 30 எம்பிக்களுக்கு கொரோனா
இன்று மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே பாராளுமன்றத்திற்கு வந்த 2 அமைச்சர்கள் மற்றும் 30 எம்பிக்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பீதிக்கு இடையே பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் பாராளுமன்ற ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் பிறகே நாடாளுமன்றத்தில் நுழைய அனைவருக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இன்று நடத்தப்பட்ட பரிசோதனையில் 2 அமைச்சர்கள் மற்றும் 30 எம்பிக்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
30 எம்பிக்களில் 17 பேர் லோக்சபா எம்பிக்கள் ஆவர். மற்றவர்கள் ராஜ்யசபா உறுப்பினர்கள். நோய் பாதிக்கப்பட்ட அனைவரின் பெயர் விவரங்கள் வெளியிடப்படவில்லை. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 12 பேர் பாஜகவை சேர்ந்தவர்கள் என்று தெரிய தெரியவந்துள்ளது. எம்பிக்கள் மற்றும் அமைச்சர்கள் தவிர நாடாளுமன்றத்தில் பணிபுரியும் 60 ஊழியர்களுக்கும் நோய் பரவியது தெரியவந்துள்ளது. உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள போதிலும் மழைக்கால கூட்டத்தொடர் திட்டமிட்டபடி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.