கொரோனா தொற்றுக்கு பலியான காமெடி நடிகர்..
சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவியது. ஒரு சில நடிகர்களை தவிர மற்ற எல்லா நாடுகளும் கொரோன பரவியது யாராலும் புரிந்துகொள்ள முடியாத புதிராகவே இருக்கிறது. ஆயுதம் இன்றி உலக நாடுகளை அச்சுறுத்தும் செயலாகக் கருதப்படுகிறது.கொரோனா தொற்று இந்தியாவில் வேகமாக பரவிய நிலையில் இருக்கிறது. திரையுலக பிரபலங்கள் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய், விஷால், கருணாஸ், எஸ் எஸ் ராஜமவுலி, கீரவாணி, ஐஸ்வர்யா அர்ஜுன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டனர். சிகிச்சைக்கு பிறகு அவர்கள் குணம் அடைந்தனர்.
பலரும் குணம் ஆன நிலையில் ஒரு சில உயிர் இழப்புகள் தவிர்க்க முடியாதவையாக இருக்கிறது. தெலுங்கில் பல்வேறு படங்களில் காமெடி வேடத்தில் நடித்தவர் வேணுகோபால் கோசுரி. இவர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசமானதை அடுத்துக் கடந்த 23 நாட்களாக வென்ட்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்பட்டது. திடீரென்று இவர் நேற்று மரணம் அடைந்தார். இதையறிந்து தெலுங்கு திரையுலகினர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். வேணுகோபால கோசுரி மறைவுக்கு திரையுலகினர் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.
வேணுகோபால் மேற்கு கோதாவரி மாவட்டம் நரசபுரை சேர்ந்தவர். 1994ம் ஆண்டு தெகிம்பு என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானார். எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கிய மரியாத ராமன்னா படத்தில் சிறந்த கதாபாத்திரத்தில் நடித்தார். இதுதவிர ஏராளமான படங்களில் காமெடி வேடங்களில் நடித்திருக்கிறார் வேணுகோபால கோசுரி.