மோட்டார் சைக்கிள் ஓட்ட உரிமம் பெறும் முதல் சவுதி பெண்
சவுதியில், மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்காக உரிமம் பெறும் முதல் சவுதி பெண் அண்டைய நாட்டில் அதற்கான பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.
சவுதி அரேபியாவில் இதுவரையில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, சமீபத்தில் தான் பெண்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்கு தடை நீக்கி அனுமதிக்கப்பட்டது. இந்த அனுமதி வரும் ஜூன் மாதம் முதல் அமலுக்கு வரும் எனவும் சவதி அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவால் மகிழ்ச்சியடைந்துள்ள பெண்கள், மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், சவுதியை சேர்ந்த மரியாம் அகமது அல்&மோலேம் என்ற பெண் தனது பயிற்ச்சியை தொடங்கி உள்ளார்.
சவுதியில் வரும் ஜூன் மாதம் முதல் தான் மோட்டார் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்பதால், இவர் அண்டைய நாடான பஹ்ரைனின் மனாமாவில் உள்ள ஹர்லி டேவிட்சன் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.
ஜூன் மாதத்தில் தடை நீங்கிய பிறகு, சவுதியில் உரிமம் பெற்ற முதல் பெண் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் என்ற பெறுமையை மரியாம் பெறுவார் என நம்பப்படுகிறது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com