கீழடியில் 38 அடுக்கு உரைகிணற்றை பார்வையிட அனுமதி இல்லை : மக்கள் ஏமாற்றம் :

கீழடி அகழாய்வு தளத்தில் கண்டறியப்பட்ட38 அடுக்கு உரை வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கீழடியில் இதுவரை 20 குழிகள் தோண்டப்பட்டு 1,400 பொருட்களும், கொந்தகையில் 42 குழிகள் தோண்டப்பட்டு 29 முதுமக்கள் தாழிகளில் 20 எலும்புக் கூடுகளும், அகரத்தில் ஒன்பது குழிகளில் ஆயிரத்து 20 பொருட்களும், மணலூரில் ஒன்பது குழிகளில் 39 பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளன. அகரம், மணலூரில் பணிகள் நிறுத்தப்பட்டு விட்டது. கீழடி, கொந்தகையில் மட்டும் சில பணிகள் தொடர்ந்தன.

கீழடியில் 6வது கட்ட அகழாய்வு பணியின் போது மார்ச் 5 ம் தேதி செங்கல் கட்டுமானம் இருப்பது கண்டறியப்பட்டது. தரை தளத்துடன் காணப்பட்ட இந்த செங்கல் கட்டுமானம் 2வது கட்ட அகழாய்வின் போது மத்திய தொல்லியல் துறை கண்டறிந்த செங்கல் கட்டுமானத்தின் தொடர்ச்சி எனவும் தெரிய வந்துள்ளது. . செங்கல் கட்டுமானத்தின் ஒரு பகுதி மட்டும் கண்டறிந்த பின் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில் தமிழக தொல்லியல் துறை சார்பில் கீழடியில் மட்டும் பணி கள் மீண்டும் தொடங்கியுள்ளது. செங்கல் கட்டுமானத்தின் முழு அளவையும் வெளிக் கொணர்ந்து காட்சிப்படுத்த வசதியாக மீண்டும் ஒரு குழி தோண்டப்பட்டு வருகிறது. இன்னும் 15 நாட்கள் இங்கு பணிகள் நடைபெற உள்ளன. 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

தமிழகத்திலேயே பெரிய உறைக்கிணறு எனக் கண்டறியப்பட்ட 38 அடுக்கு உறைக்கிணற்றைக் காணத் தினசரி ஏராளமான பார்வையாளர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அகழாய்வு தளத்தினுள் அனுமதியில்லை என்பதால் பார்வையாளர்கள் ஏமாற்றமடைந்து வருகின்றனர். எனவே உறைக்கிணற்றைக் காணத் தமிழக தொல்லியல் துறை அனுமதிக்க வேண்டும் எனப் பார்வையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர் நேற்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கீழடி, கொந்தகை அகழாய்வு தளங்களைப் பார்வையிட்டார். அகழாய்வில் கண்டறியப்பட்ட உறைக்கிணறு, பாசி, அச்சு, முதுமக்கள் தாழிகள் உள்ளிட்டவற்றை அவர் பார்வையிட்டார்.

More News >>