முதன்முறையாக தங்கம் வென்ற இந்தியா - காமன்வெல்த்தில் அசத்தல்

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து நகரின் கோல்டுகோஸ்ட்டில் நடைபெற்று வரும் 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்திய அணி முதன்முறையாக பேட்மிண்டன் பிரிவில் தங்கம் வென்று சாதனை புரிந்துள்ளது.

பேட்மிண்டன் அணி பிரிவில் இந்திய அணி மலேசியாவை எதிர்கொண்டது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் - மலேசியாவின் லீ சாங்கை 21-17, 21-14 என நேர் செட் கணக்கில் எளிதாக வென்றார்.

பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் சாத்விக் ராங்கி - அஸ்வினி பொன்னப்பா ஜோடி மலேசியாவின் லியு யிங் கோ - பெங் சீன் சான் ஜோடியை 21-14, 15-21, 21-15 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றனர்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் ராங்கி - சந்திரசேகர் ஜோடி, மலேசியாவின் வீ தான் - செம் கோ ஜோடியிடம் 15-21, 20-22 என செட் கணக்கில் வீழ்ந்தது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய்னா நேவால் மலேசியாவின் சோனியா சியாவை எதிர் கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாய்னா 21-11, 19-21, 21-9 என்ற செட்களில் வெற்றி பெற்றார்.

இதன் மூலம் இந்திய அணி 3-1 என மலேசிய அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. காமன்வெல்த் வரலாற்றில் இந்திய பேட்மிண்டன் அணி தங்கப்பதக்கத்தை கைப்பற்றுவது இதுவே முதல் முறையாகும்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>