கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு கல்தா.
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் இந்த முறை அதிமுக பாஜக கூட்டணியில் இடம்பெறாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. நேற்று புதுச்சேரி வந்த பாஜக தேசிய தலைவர் நட்டாவை, வழுதாவூர் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் அதிமுக, என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்தனர். இதில் என் ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி, அதிமுக தொகுதி செயலாளர்கள், அதிமுக எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.
அப்போது புதுச்சேரி மாநிலத்தில் ஆட்சி எப்படி இருக்கிறது? மாநிலம் வளர்ச்சி பெற்றுள்ளதா?. வளர்ச்சி இருக்கிறதா? கொரோனா காலத்தில் அரசின் செயல்பாடுகள் எவ்வாறு இருந்தது என்று அதிமுக எம்எல்ஏக்களிடம் நட்டா கேட்டார். அதேசமயம் ரங்கசாமியிடம் அவர் எந்த கேள்வியும் கேட்க வில்லை. அவரும் இதனால் மவுனமாகவே இருந்தாராம். இந்த கூட்டத்தில் பாஜக தலைவர்கள் ரங்கசாமிக்கு ஏனோ முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
அதுமட்டுமல்லாது பொதுகூட்டத்தில் பேசிய நட்டா, 30 தொகுதிகள் புதுச்சேரியில் உள்ள 23 தொகுதிகளில் பாஜக போட்டியிடும் என்றார். அதன்படி மீதமுள்ள 7 தொகுதிகள் பாஜக கூட்டணியில் உள்ள அதிமுகவுக்குத்தான் ஒதுக்கப்படும் தெரிகிறது. இதனால் பாஜக, அதிமுக கூட்டணியில் இருந்து என் ஆர் காங்கிரஸ் கழற்றி விடப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.