புலிகள் வசிக்கும் மாஞ்சோலை பகுதியில் இருந்து ஏன் அனைவரையும் அப்புறப்படுத்தவில்லை?-உச்சநீதிமன்றம் கேள்வி

புலிகள் வசிக்கும் மாஞ்சோலை பகுதியில் இருந்து எஞ்சியுள்ள குடும்பத்தினரையும் அப்புறப்படுத்தாதது ஏன் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நெல்லை மாவட்டம் மஞ்சோலை விவகாரத்தில் விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி மாஞ் சோலையை சேர்ந்த ஜான் கென்னடி, அமுதா, சந்திரா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து , வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாஞ்சோலை எஸ் டேட் தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தற்போது செயல்படுத்தி வரும் மறுவாழ்வு திட்டம் தொடர்பாக கூடு தல் பிரமாண பத்திரத்தை மனுதாரர் தரப்பு தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த ஜனவரி 11ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்நாத் மற்றும் சந்தீப்மேத்தா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சஞ்சய் பரேக், மாஞ்சோலை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்து வரும் கொள்கை, மறுவாழ்வு திட்டம் ஆகியவை குறித்த விரிவான விவரங்கள் கொண்ட பிரமாணப்பத்திரம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், மொத்தம் 500க்கும் மேற்பட்டகுடும்பங்கள் உள்ளன. இவர்களை மாஞ்சோலையில் இருந்து அப்புறப்படுத்தும் முன்னர் அனைத்து மறு வாழ்வு விஷயங்களையும் செய்து கொடுக்க வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

பல்வேறு நல்வாழ்வு திட்டங்கள் அறிவிக்கப் பட்ட நிலையில் அவை அனைத்தும் காகித அளவிலேயே உள்ளன. இதில் மனிதாபிமான அடிப்படையிலும், மறுவாழ்வு திட்டத்தையும் முறையாக செயல்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கையாக உள்ளது. ஏனெனில், தற்போது மாஞ்சோலையில் எந்த அடிப்படை வசதியும் இல்லை என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,தற்போது மாஞ்சோலையில் எத்தனை குடும்பங்கள் உள்ளது என்று கேள்வியெழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னிஜெனரல் ராமன் மற்றும் வழக்கறிஞர் பூர்ணிமா கிருஷ்ணா கூறுகையிவ்ல, ' சுமார் 460 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறி விட்டனர். இப்போது, 80 குடும்பங்கள் மட்டும் தான் அங்கு உள்ளனர். மாஞ்சோலை விவகாரத்தை பொருத்தமட்டில் அடிப் படை பிரச்னை என்னவென்றால் பாதுகாப்புதான் இதுதான், அரசுக்கு சவாலாக உள்ளது. ஏனெனில் அது புலிகள் வாழும் வனப்பகுதி ஆகும். இதனால், அந்த 80 குடும்பங்களை வெளியேற கூறியுள்ளாம். அரசு தரப்பில் இருந்து வலுக்கட்டாய மாக யாரையும் அப்புறப்படுத்த விரும்பவில்லை. மாஞ்சோலையில் இந்து குடும்பங்களுக்கு அரசு மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. மாஞ்சோலை தொழிலாளர்கள் குடும்பத்தை அரசு கைவிட வில்லை. தேயிலை தோட்ட நிர்வாகம் தான் கைவிட்டது. மாஞ்சோலையில் வசிக் கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் தமிழ்நாடு அரசு தரப்பில் செய்து தரப்படுகிறது என்று தெரிவித்தனர்.

இதையடுத்து நீதிபதி கள் கூறியதாவது, "இந்த விவ காரத்தை பொறுத்தவரையில் குடியிருப்பவர்களை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று அரசு கூறவில்லையே. போதுமான அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் புலிகள் வசிக்கும் பகுதியில் எப்படி பாதுகாப்பாக வசிக்க முடியும்? . பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் மாஞ்சோலை பகுதியில் வசிக்கும் அனைவரை யும் ஏன் தமிழ்நாடு அரசு அப்புறப்படுத்தவில்லை. உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு அரசுக்கு ஆதரவாகத்தானே உள்ளது. அதனை முழுமையாக நடை முறைப்படுத்தி இருக்கலாமே? என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், வழக்கின் விசாரணையை மார்ச் 3ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

More News >>