இளையோர் பாராளுமன்ற போட்டியில் கலந்து கொள்ள விண்ணப்பிக்க... மார்ச் 9 கடைசி தேதி

இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேரு யுவ கேந்திரா சங்கதன் சார்பில், ஒவ்வொரு வருடமும் தேசிய இளையோர் பாராளுமன்ற போட்டி நடைபெற்று வருகிறது. 2019 ஆம் ஆண்டு முதல் தொடங்கிய இந்த நிகழ்ச்சி, இந்திய இளைஞர்களின் குரலுக்கான ஒரு முக்கிய மேடையாக விளங்குகிறது.கடந்த ஆண்டு ஆன்லைனில் நடைபெற்ற இப்போட்டி, இந்த ஆண்டு நேரடியாக நடைபெறவுள்ளது. மேலும், 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கி என்கிற கோட்பாட்டின் அடிப்படையில், 'வளர்ந்த பாரத இளையோர் பாராளுமன்றம் ' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

போட்டியில் 18 முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்கள் பங்கேற்கலாம்.போட்டியில் கலந்து கொள்ள ஒரு நிமிட வீடியோவை மைபாரத் போர்ட்டலில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மாவட்ட அளவிலான போட்டிக்கான தலைப்பு : "ஒரே நாடு, ஒரே தேர்தல்: வளர்ந்த பாரதத்திற்கான அடித்தளம்"மாநில அளவிலான போட்டி: தலைப்பு : "75 வருட இந்திய அரசியலமைப்பு: உரிமைகள், கடமைகள், முன்னேற்றப் பயணம். தேசிய அளவிலான போட்டி: தலைப்பு : "ஒரே நாடு, ஒரே தேர்தல்: ஜனநாயகத்தை எளிமைப்படுத்துதல், முன்னேற்றம் மற்றும் நிலைத்தன்மை போன்றவை ஆகும்.

போட்டிக்கு மாவட்ட அளவில் 150 இளையோர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.இதில் 10 வெற்றியாளர்கள் மாநில போட்டிக்கு முன்னேறுவார்கள். மாநில அளவிலிருந்து முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்கள் தேசிய போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.தேசிய போட்டியில் தேர்வாகும் அனைவருக்கும் பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.

இந்த போட்டிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி – மார்ச் 9 ஆகும். திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்ட இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு, மாவட்ட இளையோர் அலுவலர் திரு. ஞானச்சந்திரன் எல் தெரிவித்தார்.

More News >>