மத்திய அரசை கடுமையாக விமர்சிக்கும் சித்தராமையா

கர்நாடக சட்டமன்றத்திற்கு வருகிற 12-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் நெருங்குவதால் கர்நாடகத்தில் தேர்தல்களம் சூடு பிடித்துள்ளது. தேசிய கட்சிகளின் தலைவர்கள் கர்நாடகாவில் முகாமிட்டு பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றார்கள்.

இந்நிலையில் முதலமைச்சர் சித்தராமையா, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை விமர்சித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுயுள்ளார்.

அதன் விவரம் , வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. வேலையில்லா பட்டதாரிகள் ‘பக்கோடா’ விற்கும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் வைத்திருந்த ரூபாய்க்கு மதிப்பில்லாமல் போய்விட்டது. மக்கள் ஏ.டி.எம். மையங்களிலும், வங்கிகளிலும் வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணையின் விலை குறைந்து வரும் நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

ஊழலற்ற அரசு அமைப்போம் என்று உத்தரவாதம் அளித்தார்கள். ஆனால் வங்கிகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.

கறுப்பு பணம் வெள்ளையாக மாறவில்லை.

மக்கள் தங்கள் வங்கி கணக்கில் ரூ.15 லட்சத்தை பெறவில்லை. இவ்வாறு கூறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>