சட்டென்று சாலையை கடந்த காட்டு மாடுகள் ... சேர்வலாறில் அதிர்ச்சியில் உறைந்த டிரைவர்

நெல்லை மாவட்டம் அம்பை அடுத்த பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் யானை, கரடி, சிறுத்தை, காட்டெருமை உள்பட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன.

இவை அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் மலைப்பாதை மற்றும் அதன் ஓரங்களில் நிற்பதை வழக்கமாக கொண்டுள்ளன.

இந்த நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள முண்டந்துறை வனச்சரக அலுவலகத்தில் இருந்து சேர்வலாறு அணைக்கு செல்லும் மலை பாதையில் திடீரென சுமார் பத்துக்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கூட்டமாக சாலையை கடந்து தலைத் தெறிக்க ஓடின.

இதனால், அந்த பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஓட்டுநர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த காட்சியை வீடியோ எடுத்து இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

More News >>