கன்னியாகுமரி: கோதையார் பகுதியில் ரப்பர் வெட்டும் தொழிலாளி காட்டு யானை தாக்கி படுகாயம்
பேச்சிப்பாறை ஊராட்சி கோதையார் கல்லார் பகுதியை சார்ந்த ராஜன் (47) தொழிலாளி அரசு ரப்பர் கழக தோட்டத்தில் ரப்பர் பால் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது காட்டு யானை தாக்கி படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
விபத்து நடந்த பகுதியான கோதையார் பகுதியிலுள்ள ஆம்புலன்ஸ் பழுதடைந்து பல நாட்களாக சரி செய்யப்படாமல். இருப்பதால். படுகாயம் அடைந்தவர் பல மணி நேரம் உயிருக்குப் போராடிய நிலையில் குலசேகரம் பகுதியிலிருந்து 108 ஆம்புலன்ஸை வரவழைத்து பின் படுகாயமடைந்தவரை மருத்துவமனை அழைத்துச்செல்லும் அவலம் நேர்ந்துள்ளது.