நெல்லையப்பர் கோவில் ஆனி தேரோட்டத்துக்கு பிரமாண்ட வடம் தயார்
கடந்த ஆண்டு திருநெல்வேலியில் நடந்த ஆனி தேரோட்டத்தின் போது, இழுக்கப்பட்ட வடம் 5 முறை அறுந்தது. இதனால், இந்த ஆண்டு பலமான முறையில் வடம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆசியாவில் இருக்கின்ற மிகப்பெரிய தேர்களில் மூன்றாவது தேர் திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில் தேர். 28 அடி நீள, அகலம் கொண்ட 80 அடி உயரமுள்ள தேரானது திருவிழாவின் 9 ஆம் நாள் உற்சவத்தின் போது, வடம் பிடித்து இழுக்கின்ற நிகழ்ச்சி நடைபெறும். கடந்த ஆண்டு தேர் இழுக்கப்பட்ட போது, 5 முறை வடம் அறுந்து போனது. இதனை , பக்தர்கள் அபசகுணமாக கருதினார்கள். அதனால், இந்த முறை பிரமாண்டமுறையில் பலமான வடம் தயார் செய்யப்பட்டுள்ளது.
நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தின் போது மாற்று வடம் தயார் நிலையில் எப்போதும் இருக்கும். அந்தவகையில், திருச்செந்தூர் தேரின் வடம் தயாராக வைக்கப்பட்டு இருக்கும்.