திசையன்விளையில் போலியோ சொட்டு மருந்து முகாம்: பேரூராட்சி தலைவி ஜான்சி ராணி தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு சுகாதார த்துறை சார்பில் தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. அதன்படி , ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் முகாம் திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று நடந்தது. திசையன்விளை பேரூராட்சி தலைவி ஜான்சி ராணி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து நிகழ்வை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி துணை தலைவர் வி பி ஜெயக்குமார் , அரசு மருத்துவர் டாக்டர் ஆக்லின் ஜெனிஃபா பிரதீப் ஸ்வீட்ஸ் அதிபர் முருகானந்தம் , பேரூராட்சி கவுன்சிலர்கள் அய்யா குட்டி,பிரேம்குமார் ,லிவ்யா , பாஜக பிரமுகர் சக்திவேல் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.