பஸ்கள் நிற்கவில்லை : மஞ்சங்குளம் மக்கள் போராட்டம் அறிவிப்பு : போலீசார் குவிப்பு

அரசு பேருந்துகள் நின்று செல்லக் கோரி மஞ்சங்குளம் கிராம மக்கள் மறியல் போராட்ட அறிவித்துள்ளதால், ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பபட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே அமைந்துள்ள மஞ்சங்குளம் கிராமத்தில் 200க்கும் குடும்பத்தினர் கிராமத்தினர் வசித்து வருகின்றனர்.இந்த கிராம மக்கள் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மஞ்சங்குளம் பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இங்கு சரி வர பேருந்துகள் நின்று செல்வதில்லை.

நாகர்கோவில் -நெல்லை மார்க்கத்தில் இயக்கப்படும் பல்வேறு பேருந்துகள் இயக்கப்பட்டாலும் இங்கு பேருந்துகள் நிறுத்தப்படுவதிலலை இதனால், அருகிலுள்ள பெரும்பத்தும் கிராமத்துக்கு சென்று மஞ்சஙகுளம் பேருந்து ஏறக்கூடிய சூழல் உள்ளது.

இங்கு அரசு பேருந்துகள் நின்று செல்ல பலமுறை மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், இன்று கிராம மக்கள் மற்றும் நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பினர் இணைந்து மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். மறியல் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து நாங்குநேரி டி.எஸ்.பி தர்ஷிகா தலைமையில் , ஏர்வாடி பழவூர், நாங்குநேரி, விஜயநாராயணம் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் மஞ்சங்குளம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

More News >>