களக்காடு தலையணை சுற்றுலாத் தலத்தில் குளிக்கத் தடை: வனத்துறை அறிவிப்பு
நெல்லை மாவட்டம் களக்காடு மலைப்பகுதி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக, களக்காடு தலையணை சூழல் சுற்றுலாப் பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே துணை இயக்குனர் மற்றும் வன உயிரின காப்பாளர், களக்காடு (கூடுதல் பொறுப்பு) உத்தரவின்படி, இன்று (14.10.2025) முதல் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் தலையணையில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், சுற்றுலாப் பயணிகள் தலையணைப் பகுதியைப் பார்வையிட மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை களக்காடு வனச்சரக அலுவலர் தெரிவித்துள்ளார்.சுற்றுலாப் பயணிகள் வனத்துறையின் இந்த உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.