நெல்லையில் பரவலாக மழை : வெப்பம் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக இன்று தென் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
தூத்துக்குடி ,நெல்லை ,தென்காசி, கன்னியாகுமரி ,விருதுநகர் ,மதுரை ,இராமநாதபுரம், திண்டுக்கல், தேனி ,கோயம்புத்தூர், ஈரோடு ,திருப்பூர் ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
நெல்லை, தென்காசி ,கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், நெல்லை சுற்றுவட்டார பகுதிகளில் இனறு 11 மணி முதல் ஓரளவுக்கு மழை பெய்ய தொடங்கியது. இதனால், குளிர்ச்சியான கால நிலை நிலவுகிறது. கடந்த இரு மாதங்களாக நெல்லையில் கடுமையான வெப்பம் நிலவி வந்தது. இதனால், மக்கள் அவதியடைந்தனர். இப்போது, இரு நாட்களாக ஆங்காங்கே தொடர்ந்து , மழை பெய்வதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.