தூத்துக்குடியில் வீடுகளுக்குள் உலா வரும் மர்ம மனிதர் : உறக்கத்தை தொலைத்த மக்கள்
தூத்துக்குடியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இரவு நேரத்தில் வீட்டின் மொட்டைமாடியில் ஏறி உலா வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி கதிர்வேல் நகர் முதல் தெருவில் வசித்து வரும் பாலமுருகேசன் என்பவடர வசிக்கிறார். இவரது வீட்டின் மொட்டை மாடியில் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஏறியுள்ளார். காலை 6.00 மணியளவில் அந்த மர்ம நபர் மொட்டைமாடியில் இருந்து இறங்கி சென்றுள்ளார். இந்த காட்சிகள் அங்கிருந்த சி.சி.டி.வி யில் பதிவாகியுள்ளது.அதில், முதலில் வீட்டின் கதவை திறக்க முயலும்,அந்த நபர் திறக்க முடியாததால், வீட்டுக்குள் உலா வருகிறார். பின்னர், படி வழியாக மாடி ஏறி செல்கிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தூத்துக்குடி நகர் பகுதியில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனம் திருடப்படுகின்றன. பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இது குறித்து காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார் கொடுத்தாலும், தற்போது வரை , எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில் இந்த சிசிடிவி காட்சி பொதுமக்களிடம் மேலும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாலமுருகேசன் அளித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
போலீசார் முறையாக இரவு நேர பாதுகாப்பு பணியை மேற்கொள்ளாத காரணத்தினால் இது போல் சம்பவங்கள் நடப்பதாகவும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் அச்சத்துடன் உறங்க கூடிய சூழ்நிலை உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.