ராதாபுரம் கால்வாயை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க கோரி காவல்கிணறுவில் போராட்டம்

ராதாபுரம் கால்வாயை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க கோரி காவல்கிணறுவில் போராட்டம்

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவில் உள்ள அனைத்து விவசாய சங்கங்கள், அனைத்து கட்சியனரும் சேர்ந்து ராதாபுரம் கால்வாயை சீரமைக்க காவல்கிணறுவில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் திருச்செந்தூர் முன்னாள் எம்.பி தனுஷ்கோடி ஆதித்தன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

இதையடுத்து, ராதாபுரம் வட்டாட்சியர் மற்றும் வடக்கன்குளம் பொதுப்பணிதுறை பொறியாளர் ஆகியோர் போராட்டம் நடந்த பகுதிக்கு வந்தனர். பின்னர், ராதாபுரம் - தோவாளை கால்வாயை சீரமைத்து உரிய தண்ணீரை வழங்குவதாகவும், ராதாபுரம் கால்வாய் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருடன் கலந்தாலோசித்து உடனடியாக நிறைவேற்றுவதாக, எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர். இதையடுத்து, போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

பேச்சிப்பாறை அணைக்கட்டிலிருந்து, தோவாளை கால்வாய் வழியாக, ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் திறந்து விடுவதற்கு கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த மக்கள் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக, அரசியல்வாதிகள் கூறி வந்தனர். ஆனால், இன்று ராதாபுரத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த நமது பழையாறு அமைப்பினரும் மற்றும் கோதையாறு அனைத்து கால்வாய் பாசன சங்கத் தலைவர் வின்ஸ் ஆன்ட்ரு (ஏறக்குறைய 48 கால்வாய்களுக்கு தலைவர்) ஆகியோரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>