திருநெல்வேலி: கிருஷ்ணாபுரம் டாஸ்மாக் அருகே பயங்கரம்! முன்விரோதத்தால் வாலிபர் வெட்டிக்கொலை

திருநெல்வேலி மாவட்டம், கிருஷ்ணாபுரம் அருகே பைக்கில் வந்த வாலிபரை வழிமறித்த கும்பல், முன்விரோதம் காரணமாக அவரை வெட்டிக் கொலை செய்தது. அவரது நண்பருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் கோவில் பத்து கிராமத்தைச் சேர்ந்த பரமசிவன் என்பவரின் மகன் அருண்செல்வம் (29)இவர், நேற்று இரவு கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்றுள்ளார். அவருடன் அவரது நண்பரான செய்துங்கநல்லூரைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரின் மகன் ஜலீல் என்பவரும் உடன் சென்றுள்ளார்.

அப்போது, அருண்செல்வத்தை வழிமறித்த மர்ம நபர்கள் கும்பல், அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டியது. இதில், அருண்செல்வம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துப் பலியானார். அவரது நண்பர் ஜலீலுக்கும் தலையில் லேசான அரிவாள் வெட்டு விழுந்தது. தகவல் அறிந்த சிவந்திபட்டி காவல் நிலையப் போலீசார், அருண்செல்வத்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த ஜலீல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக, ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த சிலரை, சிவந்திபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

More News >>