பாபநாசம் வனச்சரக கிராமங்களில் பயிர் சேதம்: காட்டுப் பன்றிகளைப் பிடிக்க சிறப்புக் கூண்டு
அம்பாசமுத்திரம் வனக்கோட்டம் பாபநாசம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கிராமங்களில் காட்டுப் பன்றிகளால் தொடர்ந்து பயிர் சேதம் ஏற்படுவதைத் தடுக்க, வனத்துறையினர் பிரத்யேகக் கூண்டுகளை அமைத்து, அவற்றை பிடிக்கும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
பாபநாசம் வனச்சரகத்தின் கிராமங்களான அனவன் குடியிருப்பு, வேம்பையாபுரம் மற்றும் செட்டிமேடு ஆகிய பகுதிகளில் காட்டுப் பன்றிகளின் அச்சுறுத்தல் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இவை, பயிர்களை சேதப்படுத்துவதாக, விவசாயிகள் அம்பாசமுத்திரம் வனக்கோட்ட அலுவலகத்திற்கு புகார் கொடுத்தனர்.
விவசாயிகளின் கோரிக்கைகளைத் தொடர்ந்து, அம்பாசமுத்திரம் வன கோட்ட துணை இயக்குநரின் அறிவுறுத்தலின் பேரில், காட்டுப் பன்றிகளைப் பிடிக்க பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கூண்டுகளை அமைக்கும் பணியை வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். வருகின்றனர். காட்டுப் பன்றிகள் அதிகம் உலாவும் வழித்தடங்கள் முறையாக அடையாளம் காணப்பட்டு, அந்த இடங்களில் கூண்டுகள் அமைக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.முதற்கட்டமாக அனவன் குடியிருப்புப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அந்தக் கூண்டு, தற்போது செட்டிமேடு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.