தீபாவளி பண்டிகை : ஆதரவற்ற குழந்தைகளுக்கு நெல்லை துணை மேயர் புத்தாடைகள் பரிசு

தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி உலகமெங்கும் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தன்னார்வத் தொண்டர்கள், அறக்கட்டளை நிறுவனங்கள் குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு , முதியவர்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், நெல்லை மாநகர துணை மேயர் கே.ஆர். ராஜூ பாளையங்கோட்டை உதவும் இல்லங்கள் ஆரவற்றோர் இல்லத்துக்கு இன்று நேரில் சென்றார். பின்னர், அந்த குழந்தைகளுக்கு புத்தாடைகள், இனிப்புகள் , பட்டாசுகளை வழங்கி தீபாவளி வாழ்த்து கூறி மகிழ்ந்தார். அவருக்கு உதவும் இல்லங்கள் அமைப்பின் நிர்வாகிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

More News >>