லண்டன் இளவரசர் திருமணத்திற்கு இதையெல்லாம் கொண்டு போகணுமாம்!
லண்டன் இளவரசர் ஹாரியும், அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லேவை காதலித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களின் திருமணம் மே 19 ஆம் தேதி வின்ஸ்டர் காஸ்டனில் நடக்கவுள்ளது.
அரச குடும்ப திருமணம் என்பதால் குறைந்த நபர்களே அழைக்கப்பட்டுள்ளன. மணமக்களின் உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. திருமணத்திற்கு வரும்போது உணவு, தண்ணீர் கொண்டு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் திருமணத்தில் புல்தரையில் அமர்ந்தும், பால்கனியில் நின்று கொண்டும் திருமண ஜோடி முத்தமிடுவதை பார்க்கலாம். சாப்பாடு போடாவிட்டாலும் மக்கள் கொண்டு வரும் பரிசுப்பொருட்களை அரச குடும்பத்தினர் எற்று கொள்வார்களாம்.
இளவரசர் ஹாரி திருமணத்திற்கு லண்டன் ராணி இரண்டாம் எலிசபெத் அதிகாரப்பூர்வமாக சம்மதம் தெரிவித்தார். இந்நிலையில், லண்டன் இளவரசர் ஹாரியின் திருமணத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், இங்கிலாந்து பிரதமர் தெரசா மே உள்ளிட்டோருக்கு அழைப்பு இல்லை என அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என்பது குறிபிடத்தக்கது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com