பசுமை வழிச்சாலை... லஞ்சம் வாங்குவதில் அரசு முனைப்பு- ஸ்டாலின்

பசுமை வழிச்சாலை திட்டத்தில் மக்களைப் பற்றி கவலைப்படாமல் பல கோடி ரூபாய் பேரம் பேசி லஞ்சம் வாங்க வேண்டும் என்பதில் மட்டுமே அரசு முனைப்பாக இருப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின், அவரது தொகுதியான கொளத்தூரில், மழை நீர் வடிகால்கள் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். அதேபோல், பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகைகளையும், ஏழை எளியோருக்கு தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

பின்னர் பேசிய அவர், "பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பது வேதனை அளிக்கிறது. மேலும், எட்டு வழி பசுமைச் சாலை உள்பட எந்த திட்டமாக இருந்தாலும், மக்களுடைய கருத்துகளை கேட்டுதான் முடிவெடுக்க வேண்டும்." என அறிவுறுத்தினார்.

"குறிப்பாக, இந்தப் பிரச்சினையில் பல கோடி ரூபாய் பேரம் பேசி இலஞ்சம் வாங்கப்பட்டு, இதிலும் கமிஷன் வாங்க வேண்டுமென்பதற்காக மட்டுமே, இந்தத் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்கிற எண்ணத்தில் இந்த அரசு முனைப்பாக இருக்கிறது" என ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

More News >>