காவிரியின் குறுக்கே அணை- கர்நாடகா சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல்

பெங்களூருவின் தண்ணீர் தேவைக்காக காவிரியின் குறுக்கே மேகதாது அருகே புதிதாக அணை கட்டப்படும் என இன்று கர்நாடகா சட்டசபை முடிவு செய்துள்ளது.

கர்நாடக முதல்வராக பதவியேற்ற குமாரசாமி முதல் பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். முதல் பட்ஜெட்டிலேயே கர்நாடக மாநிலத்தில் ரூ.34,000 கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக முதலில் முதல்வர் குமாரசாமி அறிவித்தார்.

பின்னர், பெங்களூருவின் தண்ணீர் தேவைக்காக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் மத்திய அரசின் அனுமதி பெற்று அணை கட்டப்படும் என்றும் தனது முதல் பட்ஜெட் உரையில் குமாரசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழகத்துக்குக் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தற்போது தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு அந்த ஆணையத்தில் முதல் கூட்டம் மட்டுமே நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்த்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக அறிவித்திருந்த குமாரசாமி, தற்போது புதிய அணைக்கு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

More News >>