ஏடிஎம்மில் பணம் எடுக்க இனி ஏடிஎம் கார்டு தேவையில்லை! எர்டெல் போதும்

ஏர்டெல்லின் புதிய அறிவிப்பு ஏடிஎம் கார்டு இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம் அதன் வழிமுறை குறித்து இங்கே காணலாம்.

இந்த சேவையை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் ‘My Airtel' அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும். முதலில் ஐ.எம்.டி வசதி கொண்ட ஏடிஎம்மிற்கு செல்ல வேண்டும்.

அங்கு 'My Airtel' ஆப் மூலம் ‘Cash Withdrawal' ஆப்ஷனைக் கிளிக் செய்ய வேண்டும். பின்னர் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். இதையடுத்து போனிற்கு ஓடிபி(OTP) வரும். அதைப் பதிவிட்டு ‘Self Withdrawal' ஆப்ஷன் மூலம் தேவையான பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

முதல் 2 பணப்பரிவர்த்தனை மட்டுமே இலவசம். அதன்பிறகு ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும். நாடு முழுவதும் 20,000 ஏடிஎம்களில் இந்த வசதி உள்ளது.ஆண்டின் இறுதிக்குள் 1,00,000 ஏடிஎம்களில் இந்த வசதி செய்யப்படும் என்று ஏர்டெல் தெரிவித்துள்ளது. இந்த வசதியை தனக்காகவும், பணம் எடுக்கவும் மற்றும்  பிறருக்காகவும் பயன்படுத்தலாம்.

More News >>