உங்கள் வாய் துர்நாற்றம் நீங்க என்ன செய்யலாம்?
துர்நாற்றம் என்றால் யாருக்குதான் பிடிக்கும். சுவையில்லாத உணவைக்கூட வாசனைக்காட்டி விற்பனை செய்யும் உலகம் இது. இந்த பகட்டான உலகில் பல மனிதர்களை சந்தித்து பேசக்கூடியச் சூழல் உள்ளது. இவர்களிடையே பேசும்போது வாயில் துர்நாற்றம் வந்தால் அவர்களிடையே நம் மரியாதை சுத்தமாக இழந்து காணப்படுவோம்.
இதுப்போன்று வாய் துர்நாற்றம் வராமல் தம்மை பாதுகாத்துக் கொள்ள இந்த வழிமுறைகளை பின்பற்றவும்.
உங்கள் சாப்பாட்டில் குறைந்த அளவு கார்போஹைட்ரேட் கொண்ட உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ளுங்கள். அதோடு சரியான அளவில் கொழுப்பு மற்றும் புரோட்டீன்ஸை சாப்பிடுங்கள். நிறைய பச்சை காய்கறி மற்றும் கீரைகளை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய ஸ்நாக்ஸ்க்கு பதிலாக ஆப்பிள் ,காரட் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதிகம் தண்ணீரை குடியுங்கள் (48 அவுன்ஸ்). பச்சை காய்கறிகளின் ஜுஸை அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள். காபி அதிகம் பருகாதீர்கள். நீங்கள் பேசும்போது இயற்கையான மணத்தை உணர புதினா மற்றும் பார்ஸ்லி இதழ்களை மெல்லுங்கள். உங்களுடைய நாக்கை தினமும் சுத்தம் செய்யுங்கள். ஆல்கஹால் இல்லாத மவுத் வாஷை பயன்படுத்துங்கள். சர்க்கரை இல்லாத மெல்லும் கோந்தை பயன்படுத்துங்கள். நீங்கள் வெளியே செல்லும்போது அதிகம் புகைப் பிடிக்காதீர்கள். நல்ல மணமுடைய லிப் க்ளாஸை பெண்கள் உபயோகிக்கலாம். அடிக்கடி மருத்துவரிடம் கவுன்சிலிங் செல்வது நல்லது.