ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிப்பு
ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசத்தை 4 மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து அதற்கான அரசாணையும் 2017 செப்டம்பர் 25 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது.முதலாவதாக மூன்று மாதம் கால அவகாசம் கொடுத்த நிலையில் மேலும் ஆறுமாதம், அதன் பின் நான்கு மாதம் என கால நீட்டிப்பை தமிழக அரசு வழங்கியது.
அந்த கால அவகாசம் அக்டோபர் 24 ஆம் தேதியான இன்றுடன் நிறைவடைகிறது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக மேலும் பலரை விசாரிக்க வேண்டி உள்ளதால் கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் கேட்டுக்கொண்டது.
அதனை ஏற்ற அரசு, விசாரணை ஆணையத்தின் காலத்தை மேலும் 4 மாதத்திற்கு நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 4 மாதத்திற்குள் ஆணையம் தனது விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுவது இது 3வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.