மேற்கிந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை வென்றது இந்தியா!
5வது ஒருநாள் தொடரில் மேற்கிந்திய அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
கிரிக்கெட் தொடர்களில் விளையாட இந்தியா வந்துள்ள மேற்கிந்திய அணி, டெஸ்ட் தொடரை 2-0 என இழந்தது. அடுத்து 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 3-1 என இந்திய அணி வெற்றியை எட்டியுள்ளது. ஒரு போட்டியை சமன் செய்த மேற்கிந்திய அணி, ஒரு போட்டியில் வென்றது குறிப்பிடத்தக்கது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 104 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஜடஜே 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
எளிய இலக்கை துரத்திய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களில், இன்றைய போட்டியிலும் ஷிகர் தவான் சிறப்பாக ஆடாமல் 6 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். பின்னர் ரோகித் சர்மாவுடன் கைகோர்த்த கோலி பலமான பார்டனர்ஷிப் கொண்டு வெற்றியை ஈட்டினர்.
14.5 ஓவர்களிலேயே அதிரடியாக ஆடி இந்திய அணி 105 ரன்கள் குவித்து வெற்றியை பெற்றது. இந்திய அணியில் ஆரம்பம் முதலே அசத்தலாக ஆடிய ரோகித் சர்மா 56 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகள் விளாசி 63 ரன்களை எடுத்தார்.
கேப்டன் விராத் கோலி, 29 பந்துகளில் 6 பவுண்டரிகள் விளாசி 33 ரன்களை குவித்து நிலையில், இந்திய அணி இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
தல தோனி ஒரு ரன் எடுத்தால் 10,000 ரன்களை கடக்கும் சாதனைக்கு வாய்ப்பு கிட்டவில்லை. அடுத்த போட்டியிலாவது தோனி தனது சாதனை படைக்க வாய்ப்பு கிட்டுமா என்பது தோனி அணியில் இடம்பெறுவதில் தான் உள்ளது.